5 ஏக்கர் நிலம் வைத்திருப்போருக்கு குட்நியூஸ்.. பம்ப் செட் வாங்க 50% மானியம்.. விவசாயிகள் மகிழ்ச்சி

post-img
சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவியை தமிழக அரசு வழங்கிவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழக விவசாயிகளை பொறுத்தவரை, குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.. இதனால், அவர்களுக்கு மின் நுகர்வு அதிகமாகிவிடுகிறது.. அத்துடன், பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் மிச்சமாகி, மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைந்து விடுகின்றனது. சிக்கல்கள்: மின்சார பயன்பாட்டு திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இரைத்தல் போன்றவையே இந்த திட்டத்தின் முதன்மையாக நோக்கமாக உள்ளன. இந்த மானிய திட்டத்தில், பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட்டை நிறுவி கொள்ளலாம்.. அந்தவகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றன.. அதாவது, மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர்: இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. காரணம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக 1000 எண்கள் பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பலன்பெற வேண்டுமானால், விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், போட்டோ, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்றவற்றை ஆவணங்களாக இணைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்: இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்டத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "விவசாயிகள் இரவு மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறாா்கள். அவ்வாறு செல்லும்போது, பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளால் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், பம்பு செட்டுகளை வீட்டிலிருந்தபடியே இயக்கும் விதமாக, கோவை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே கைப்பேசி மூலம் இயக்கிடவும், நிறுத்திடவும் முடியும். பெண் விவசாயிகள்: இதற்காக ஆதிதிராவிடா், பழங்குடியினா், குறு, சிறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் கோவை, பொள்ளாச்சி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post