மொசாட் உளவு அமைப்பு செய்த காரியம்.. ஹிஸ்புல்லா தலைவரின் அந்தரங்க தகவல்களும் லீக்! பகீர் தகவல்

post-img
தெஹ்ரான்: இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் கண்காணிப்பு அமைப்புகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. எவ்வளவு பலத்த கட்டுப்பாடுகள் என்றாலும் அதையும் தாண்டி ஊடுருவுவது தான் மொசாட் திறமை. அப்படி தான் ஹிஸ்புல்லா மூத்த தளபதியான ஃபுவாட் ஷுக்ரை கண்காணித்த போது சில வினோதமான தகவல்கள் மொசாட்டிற்கு கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இப்போது கிட்டதட்ட போர் முடியும் தறுவாய்க்கு வந்துள்ள நிலையில், இந்த மோதல் தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஹிஸ்புல்லா மூத்த தளபதி: இதற்கிடையே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களைக் கண்காணித்த போது இஸ்ரேல் சேகரித்த விவரங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருந்ததும் அவர்கள் அனைவரையும் அவர் செல்போன் மூலமாகவே திருமணம் செய்ததும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் கண்காணிப்பதில் தெரிய வந்தது. ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான ஃபுவாட் ஷுக்ருக்கு இதுபோல நான்கு திருமணங்கள் நடந்துள்ளது. இந்த 4 திருமணங்களுமே இந்தாண்டு தான் நடந்துள்ளது. முதலில் 4 பேருடன் திருமணம் செய்யாமலேயே அவர் இருந்துள்ளார். இருப்பினும், இதனால் அவருக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டதாகவும் இதையடுத்தே நான்கு பேரையும் அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. வினோத தகவல்: அதாவது முதலில் இதுபோல நான்கு பேருடன் தொடர்பில் இருப்பதால் ஷுக்ருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹிஸ்புல்லாவின் மிக உயர்ந்த மத மதகுருவான ஹஷேம் சஃபிதீனை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியிருக்கிறார். அப்போது சஃபிதீன் தான் நான்கு பேரையும் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறியதாக மொசாட் தரப்பில் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே அவசர அவசரமாக இவர் நான்கு பேரையும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த 4 பெண்கள் யார்.. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் மொசாட் வசம் கிடைக்கவில்லையாம். மொசாட்: ஷுக்ர் உட்பட ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கிய தளபதிகளை மொசாட் பல ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கண்காணித்தே வந்துள்ளது. இதில் அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமின்றி, இதுபோல தனிப்பட்ட விவரங்களையும் கூட மொசாட் சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2006ல் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் வெடித்த நிலையில், அப்போதே முதலே ஹிஸ்புல்லா தலைவர்களை மொசாட் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. சரமாரி ஏவுகணை தாக்குதல்கள்: கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அதில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டினர் கொல்லப்பட்டனர். இதற்கு முளையாக ஷுக்ர் இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் கொல்ல இஸ்ரேல் முடிவு செய்தது.. இதையடுத்து கண்காணிப்பு வளையத்தை மொசாட் தீவிரப்படுத்திய நிலையில், ஒரு டெலிபோன் அழைப்பில் அவரது இருப்பிடம் தெரிய வந்தது. உடனடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஷுக்ர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷுக்ர் இதற்கு முன்பும் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு இருக்கிறார். கடந்த 1983ஆம் ஆண்டு லெபனானின் பெய்ரூட்டில் நடந்த மிக மோசமான தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்குப் பின்னணியிலும் ஷுக்ர் இருந்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post