2 கோடி அப்பு..! புதிய ஷோரூம் திறந்த ஷோபா பாய்.. ஒரு ‘குட்டி’ தொழிலதிபரின் சாதனை

post-img
சென்னை: இளம் வயதில் மொபைல் போன் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பலரும் நிலையில் யூடியூப் மூலம் பிரபலமான ஷோபா பாய் தனது முயற்சியால் மிகப் பிரம்மாண்டமான புதிய கடையை திறந்து இருக்கிறார். யூடியூப் ரீல்ஸ் மூலம் ஒரு பிரபலமாக மாறியவர் சிறுவன் ஷோ பாய். அவர் தனது கடையைப் பிரபலமாக்க வேண்டிப் போட்ட வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வீயூவ்ஸ் போனதால், ஓடாமல் கிடந்த தனது அப்பாவின் வியாபாரத்தை ஒரே இரவில் ஓஹோ என்று உச்சத்திற்குக் கொண்டு போய்விட்டான். பலரும் இவரது வீடியோ மீது ஆர்வம் கொண்டு கடைக்குப் போய் ஷோபா வாங்க ஆரம்பித்ததால் இவரைப் பலரும் ஷோபா பாய் என்றே அழைக்க தொடங்கிவிட்டனர். இந்த சிறுவனின் பெயர் முகமது ரசூல். அது பலருக்கும் தெரியாது. இந்த சிறிய வயதில் பள்ளிப் படிப்பையும் பார்த்துக்கொண்டு கடையையும் கட்டிக் காப்பாற்றி இருக்கும் இவர், சினிமாவில் நடிக்கும் அளவுக்கு சமூக ஊடகம் இவரை உச்சத்திற்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறது. இவரது அப்பா நடத்தி வந்த நிஃப்யா ஃபர்னிச்சர் கடை இந்தப் பையனால் பெரிய புகழைச் சம்பாதித்திருக்கிறது. இந்த இளம் வயதில் உழைத்து ஒரு புதிய ஷோபா கடையை திறக்கும் அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார் இந்தக் குட்டித் தொழிலதிபர். முகமது ரசூல் ஷோபாவை இன்ஸ்டாவில் கூவிக் கூவி விற்பதே ஒரு தனி ஸ்டைலாக மாறியது. “எவ்வளவு பெஸ்ட்டா பண்ணி தரணுமோ அந்தளவுக்கு பண்ணி தருவோம்” என்ற டயலாக்தான் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த சின்ன வயதில் இவனே முயற்சி செய்து வியாபாரத்தை டெவல்ப் செய்து இப்போது 2 கோடி ரூபாய் செலவில் புதிய கடையை திறந்து இருக்கிறார். இந்தப் புதிய கடையை யாரை வைத்து திறந்து இருக்கிறார் தெரியுமா? அதுவே பெரிய சர்ப்ரைஸ். “நான் ஒரு செலிபிரிட்டி கூப்பிட்டுக் கடையை ஓபன் பண்ணலாம் என்று அப்பாவிடம் சொன்னோன். அவர் 'நமக்கு ஒருவர் உதவி செய்தவரை மறக்கக்கூடாது’என்று சொன்னார். அதனால் எங்கள் பழைய வீட்டு ஓனரை கூப்பிட்டு இந்தக் கடையை திறக்க வைத்துள்ளேன். நாம் வாழ்க்கையில் எப்போது பழைய உதவியை மறக்கக்கூடாது” என்கிறார் இந்தக் குட்டி ஷோபா பாய். இந்தப் பையனுக்கு சரவணா ஸ்டோர் முதலாளிதான் ரோல் மாடலாம். அதற்குக் காரணம் சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் தி நகருக்குப் போகும்போது அந்தக் கடை முன்பாக நடக்கையில் ஏசி காற்று வீசுமாம். அதைப் பார்த்து அவரைப் போல் தொழிலில் உயரவேண்டும் எனக் கனவு கண்டுள்ளார் இந்தச் சிறுவன். பல குழந்தைகள் மொபைல் போனை வைத்து கேம் விளையாடிக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தப் பையன் அதே ஊடகத்தை வைத்து ஒரு தொழில்முனைவோராக மாறி இருக்கிறான். இவரைப் பார்த்து பலரும் இன்றைக்கு தங்களின் கடையை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இவர் ஒரு முன்னோடி. வெறும் ஷோபா மட்டுமே விற்காமல் சமூக கருத்துகளையும் இந்தப் பொடி பையன் தனது வீடியோக்கள் மூலம் கூறிவருகிறார். “கடந்த ஆண்டு நான் வெறும் பாயாக இருந்தேன். இப்போது மக்களின் ஆதரவால் ஷோபா பாய் ஆக வளர்ந்து இருக்கிறேன். அதற்கு மக்கள்தான் காரணம். அவர்கள் செய்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன்” என்கிறார் ரசூல். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post