ஆடுகள் வளர்க்க ஆசையா.. 50% மானியம் தரும் சூப்பரான திட்டம்.. கொள்ளை லாபம் தரும் கோழி, பன்றி வளர்ப்பு

post-img
சென்னை: வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட "தேசிய கால்நடை இயக்கம்" (National Livestock Mission) சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? இந்த திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் என்னென்ன? விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் "தேசிய கால்நடை இயக்கம்".. நோக்கம் என்ன: புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனப் பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.. இது இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உற்பத்தி அதிகமாகும் பட்சத்தில் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, ஏற்றுமதி செய்து வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியும் வழங்கப்படுகிறது. பாரத பிரதமரின் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ் புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனப் பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆடுகள் வளர்ப்பு: அதுபோலவே, செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள, தொழில் முனைவோரை உருவாக்க திட்டம் தயாரித்து செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். பெண் பன்றிகள்: ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்ப்பதற்கு 100, 200, 300, 400, 500 ஆடுகள் என 5 அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும். பன்றி பண்ணை அமைக்க 50 பெண் பன்றிகள் அல்லது 100 பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க 50 பெண் பன்றிகள் அல்லது 100 பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓராண்டில் 2,000 முதல் 2400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல் ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம், தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும். யாருக்கு கிடைக்கும்: தனி நபர், சுய உதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் பிரிவு, 8 நிறுவனங்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.. அதேபோல, முனைவோர் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர், தகுதியான நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதம் பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/: என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். ஆவணங்கள்: திட்ட அறிக்கை படிவம், நிலத்தின் ஆவணம், நிலத்தின் போட்டோ, பயனாளிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு, ஜிஎஸ்டி பதிவு சான்று, உள்ளாட்சி தடையில்லா சான்று, மின் கட்டண பில், குடிநீர் பில், போன் பில், வங்கி கணக்கு புத்தகம், ஒப்பந்த பத்திரம் இவைகளில் ஏதாவது ஒன்று கட்டாயம் இணைக்க வேண்டும். 3 வருடங்களின் வங்கி கணக்கு பரிமாற்று சான்றிதழ், ஜாதி சான்று, கல்வி சான்றிதழ், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மற்றும் முன்னனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post