கும்பமேளாவுக்கும் மகா கும்பமேளாவுக்கும் இடையே என்ன வித்தியாசம்.. பக்தர்களே இதை நோட் பண்ணுங்க

post-img
லக்னோ: இந்தாண்டு மகா கும்பமேளா வரும் ஜன. 13ம் தேதி தொடங்கி பிப். 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பலருக்கும் வழக்கமான கும்பமேளாவுக்கும் மகா கும்பமேளாவுக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும். இதை மிக முக்கியமான மற்றும் புனிதமான நிகழ்வுகளில் ஒன்றாக இந்து மக்கள் கருதுகிறார்கள். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனிதத் தலத்தில் உலகம் முடிவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி புனித நீராடுவார்கள். மகா கும்பமேளா: மகா கும்பமேளாவுக்கு இந்து புராணங்களில் ஆழமான வேர்களைக் கொண்டு இருக்கிறது. தாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து மோட்சமாக இந்த மகா கும்பமேளாவை இந்துக்கள் கருதுகிறார்கள். இந்தாண்டு மகா கும்பமேளா வரும் ஜன. 13ம் தேதி ஆரம்பித்து பிப. 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஷாஹி ஸ்னான் எனப்படும் புனித நீராடுவது சிறப்பான நிகழ்வு. அது இரண்டாம் நாள் ஜன. 14ம் தேதி நடக்கிறது. இந்த மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்த மத்திய அரசும் உத்தரப் பிரதேச அரசும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளைச் செய்துள்ளன. மின்சாரம், கழிப்பறை, குளியலறை எனப் பக்தர்கள் வசதிக்காக ஏகப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பலருக்கும் வழக்கமான கும்பமேளாவுக்கும் இந்த மகா கும்பமேளாவுக்கும் என்ன வேறுபாடு என்பதில் குழப்பம் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். வேறுபாடுகள்: கும்பமேளா என்பது ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இது ஹரித்வார் (கங்கை), உஜ்ஜைன் (ஷிப்ரா), நாசிக் (கோதாவரி), மற்றும் பிரயாக்ராஜ் (கங்கை-யமுனா-சரஸ்வதி) ஆகிய நான்கு புனிதத் தலங்களில் சுழற்சி முறையில் நடக்கும்.. ஒவ்வொரு தளத்திலும் கும்பமேளா நடக்கும் போதும் ஒவ்வொரு சடங்குகள் பின்பற்றப்படும். ஒரு நகரில் கும்பமேளா நடந்தால் அடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகே அங்கு கும்பமேளா நடக்கும். அதாவது கடந்த 2019ல் பிரயாக்ராஜ் கும்பமேளா நடந்தது. இதன் பிறகு அங்கு 2031ம் ஆண்டு தான் கும்பமேளா நடக்கும். அதேநேரம் மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அனைத்து கும்பமேளாக்களிலும் இதுவே மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது இந்தாண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா எப்போதும் பிரயாக்ராஜில் தான் நடக்கும். இந்த இடத்தில் தான் கங்கை, யமுனை மற்றும் இந்துக்கள் நம்பும் சரஸ்வதி நதி ஒரே இடத்தில் சங்கமிப்பதாகச் சொல்லப்படுகிறது. கலந்து கொள்ளும் மக்கள்: இந்த இரண்டுமே நாம் வாழ்க்கையில் செய்யும் பாவங்களை போக்கவும் புனிதமடையவும் உதவுவதாக நம்பப்படுகிறது. கும்பமேளா என்பது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்பதாலும் இது சிறியளவில் நடக்கும் என்பதாலும் இதில் சில கோடி பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். அதேநேரம் மகா கும்பமேளா என்பது உலகின் மிகப் பெரிய மத நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் சுமார் 40 கோடி பேர் வரை கலந்து கொள்கிறார்கள். இதுவே வழக்கமான கும்பமேளாவுக்கும் மகா கும்பமேளாவுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடாகும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post