டெலிபிராம்ப்டர் இல்லாமல் மோடியால் பேச முடியாது.. இதோ பாருங்க! வீடியோ பகிர்ந்து சீண்டிய காங்கிரஸ்

post-img
டெல்லி: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அங்கு பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று பொதுக்கூட்டத்தில் மோடி பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நிமிடம் பேசாமல் நின்றார். இந்த வீடியோவை பகிர்ந்து, டெலிபிராம்ப்டர் இல்லாமல் பிரதமர் மோடியால் பேச முடியாது போல.. அதற்காக தான் அப்படியே பேசாமல் நின்றுவிட்டதாக கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கேரள காங்கிரஸ் விமர்சனம் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மின்னல் வேகத்தில கட்சி பணிகளை பாஜக முடுக்கி விட்டுள்ளது. பிரதமர் மோடியும் டெல்லியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். டெல்லி ரோஹினி பகுதியில் பிரதமர் மோடி பாஜக கூட்டத்தில் பேசினர். அப்போது ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதனிடையெ, பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென பேச்சை நிறுத்தினார். அப்போது டெலிபிராம்ப்டர் வேலை செய்யவில்லை என்றும் அதனால், பேச தெரியாமல் மோடி தடுமாறியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:- Helpless Mr. Prime Minister! Teleprompter stopped working in the middle. Cannot utter a word without it. People think that Modi controls everyone, whereas he is under the control of Teleprompter operator and script writer. pic.twitter.com/KPT8t2hWAx ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை டெலிபிரம்ப்டர் பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென நின்று விட்டது. டெலிபிராம்ப்டர் இன்றி ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மோடிதான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில், பிரதமர் மோடி டெலிபிராம்ப்டர் ஆபரேட்டர் மற்றும் ஸ்கிரிப்ட் எழுதுபவர் கட்டுப்பாட்டிலும் மோடி இருக்கிறார் என சாடியுள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த வீடியோவை பகிர்ந்து பிரதமர் மோடியை விமர்ச்சித்துள்ளது. ஆம் ஆத்மி தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், " பாஜகவை போல மோடியின் டெலிபிராம்ப்டரும் தற்போது தோல்வி அடைந்துவிட்டது" என்று சாடியுள்ளது. டெல்லியில் மோடி பிரசாரம் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியில் டெல்லி துன்பகரமாக மாறியுள்ளது. டெல்லி தற்போது வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக நல்லாட்சியை கொடுக்கும் என மக்கள் நம்புகிறார்கள். ஒடிசா, ஹரியானாவில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் எம்பிக்கள் அனைவருக்கும் மக்கள் வெற்றியை கொடுத்தார்கள். சட்டமன்ற தேர்தலிலும் தாமரை மலரும் என நம்பிக்கை உள்ளது. டெல்லியில் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்க்ளை பாஜக வந்தால் நிறுத்திவிடும் என ஆம் ஆத்மி அச்சத்தை பரப்புகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படாது. ஆம் ஆத்மி அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படும்" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post