புதிய வருமான வரி தேர்வு செய்தவரா? வரி தாக்கல் செய்யும்போது 5 ஸ்டெப் முக்கியம்! ரூ.17,500 சேமிக்கலாம்

post-img
சென்னை: 2024 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் சீதாராமன் புதிய வருமான வரித் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். வரி அடுக்குகளில் (Tax slab) மாற்றங்களுடன், நிலையான கழிவு (Standard deduction) வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான (NPS) ஊழியரின் பங்களிப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2025ல் ஜனவரி 15ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு தரப்பட்டுள்ளது. புதிய வரி முறையில் வருமான வரி செலுத்துவோர், முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் உள்ளன. ஏனெனில் பழைய வருமான வரி விதிப்பை தேர்வு செய்தோருக்கு எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. புதிய முறையை தேர்வு செய்தோருக்குதான் கடந்த பட்ஜெட்டில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 1. வருமான வரி அடுக்கு விகிதங்கள்: புதிய வரி முறையில் வருமான வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ₹3 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை. ₹3 லட்சம் முதல் ₹7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், ₹7 லட்சம் முதல் ₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் விதிக்கப்படும். ₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும், ₹12 லட்சம் முதல் ₹15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் விதிக்கப்படும். ₹15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால், வரி விகிதம் 30% ஆக இருக்கும். 2. சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான நிலையான கழித்தல்: புதிய வரி முறையில், நிலையான கழித்தல் உச்சவரம்பு ₹50,000லிருந்து ₹75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3. குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான கழித்தல்: குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான கழித்தல் வரம்பு ₹15,000லிருந்து ₹25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 4. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS): பிரிவு 80CCD(2) இன் கீழ், ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10% வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு, இந்த வரம்பு 14% ஆக அதிகமாக உள்ளது. 5. எவ்வளவு வரி சேமிக்க முடியும்? புதிய வரி முறையில், அரசு வருமான வரி அடுக்குகளை மாற்றியமைத்துள்ளது என்பதால் இதை தேர்ந்தெடுக்கும் மக்கள் ஆண்டுக்கு ₹17,500 வரை கூடுதலாக சேமிக்க முடியும். ₹15,00,000 வருமானம் பெறுகிறார் ஒருவர். எனவே அவர் 30% வரி வரம்பில் வருவார். இதை உதாரணமாக கொண்டு எப்படி சேமிக்கலாம் என்பதற்கான விளக்கம் இதோ. இதையெல்லாம் கவனமாக பரிசீலித்து, தங்களுக்கு எது சிறந்த வரி முறை எது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post