ஆப்கன்-பாகிஸ்தான் போர்.. இந்தியா கவனமாக இருக்க வேண்டிய இடம் இதுதான்! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

post-img
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இப்போது போரிட்டுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது. போர் உறுதி என்கிற நிலை வந்தால் உடனடியாக இந்தியா எந்த இடத்தில் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். இந்தியாவுக்கான சாதகமான விஷயங்கள்: போர் நடந்தால், பாகிஸ்தானின் கவனம் முழுக்க ஆப்கன் மீதுதான் இருக்கும். எனவே இந்தியாவில் நாசகர வேலைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கம்மிதான். குறிப்பாக எல்லை தாண்டிய ஊடுருவல்கள் முன்னெப்போதை விடவும் இப்போது குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த கேப்பை பயன்படுத்தி, இந்தியா தனக்கு சாதகமான அனைத்து வேலைகளையும் எல்லையில் முடித்துவிடும். மற்றொரு சாதகமான விஷயம், ஆப்கானிஸ்தானுடனான உறவை வலுப்படுத்த முடியும். தொடக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தானில் இந்தியா சில முதலீடுகளை செய்திருக்கிறது. போர் தொடங்கினால், இந்தியாவின் உதவியை ஆப்கன் அதிகமான நாடும். ஏனெினல் உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஆப்கனுக்கு ஏற்படும். எனவே அந்த வகையில் போர் இந்தியாவுக்கு சாதாகமாக அமையும் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆப்கனுடன் உறவு: மட்டுமல்லாது நடுநிலைக்காக இந்தியாவை ஆப்கன் நாடும். பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி அந்நாட்டுக்கு எதிரான ஒரு கூட்டணியை இந்தியா, போரை வைத்து உருவாக்கும். பாகிஸ்தானில் மட்டுமல்லாது, ஆப்கனிலிருந்து இயங்கும் தலிபான் அமைப்பும் போரில் பிஸியாகிவிடும். எனவே இந்தியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறையும். அதேபோல ஆப்கனில் மனிதாபிமான உதவிகளுக்கான தேவையும் எழும். இதற்கு உதவி செய்வதன் மூலம் ஆப்கனுடன் இந்தியாவின் உறவு பலப்படும். இதெல்லாம் போர் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் நன்மைகளாகும். பாதகங்கள் என்னென்ன?: முதல் பிரச்னை அகதிகள் நெருக்கடி. போர் காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்ததை போல, ஆப்கன், பாகிஸ்தானிலிருந்து அகதிகள் இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் புதிய சட்டங்களின்படி (CAA), இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் அகதிகளாக வந்து, தங்கி சில ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை பெறலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கனியிலிருந்து அகதிகளாக வருபவர்கள் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்களாகதான் இருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்கது. வர்த்தகம்: போர் காரணமாக ஆப்கனுடனான இந்தியாவின் வர்த்தம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்னதான் உள்கட்டமைப்பை அந்நாட்டு அரசு மேம்படுத்த நினைத்தாலும் அதைவிட அதிகமாக ஆயுதங்களின் தேவை இருக்கும். எனவே, இந்தியாவுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தும். மட்டுமல்லாது இந்தியாவின் எல்லைகளில் உள்ள சிறிய குழுக்களை கூட போர் வலிமைப்படுத்தும். இது எல்லை மீறல் குறித்த அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. ஆப்கனில் சல்மா அணையை இந்தியாதான் கட்டி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதேபோல அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தையும் இந்திய நிறுவனங்கள்தான் கட்ட இருப்பதாக ஓப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. போர் தொடங்கினால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்படும். கூட்டணி: எல்லா போர்களும் இரண்டு விஷயத்தை உருவாக்கும். ஒன்று பிளவு, இன்னொன்று இணைவு. அதாவது போர் உச்சத்தை எட்டும்போது இரண்டு நாடுகளும் எப்போது எதிரிகளாகவே பிரிந்துவிடும். உதாரணத்திற்கு ரஷ்யா-அமெரிக்கா போல. ஆனால் சில நேரங்களில் இரண்டும் ஒன்று சேர்ந்துவிடும். இதே ரஷ்யாவும் அமெரிக்காவும் சர்வதேச விண்வெளி மையத்தில் இணைந்துதான் பணியாற்றுகின்றன. அப்படி ஏதாவது ஒரு புள்ளியில் ஆப்கனும், பாகிஸ்தானும் இணைந்துவிட்டால் இந்தியாவுக்கு தலைவலி டபுள் ஆகிவிடும் என்பது கவனிக்கத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post