மாஸ்கோ: உலகில் யாராலும் தடுக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. கடந்த 1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானம், இதுவரை 2 முறை மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தென்-மத்திய உக்ரைனில் தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, சப்போரியா நகரத்தின் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தது. இந்த நகரம் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உக்ரைனின் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா, தனது மிக வலுவான விமானமான F16-ஐ அனுப்பி வைத்தது.
இந்த விமானம் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. F-16 நவீன தொழில்நுட்பங்களை கொண்ட 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாதுதான். ஆனால் 4.5ம் தலைமுறை விமானமாக கருதப்படுகிறது. முதன் முதலாக 1978ம் ஆண்டு F-16 பயன்பாட்டுக்கு வந்தது. இத்தனை ஆண்டுகளில் இதில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது அட்டகாசமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்த விமானங்களை வாங்கி வைத்திருக்கின்றன.
F-16 விமானங்களால் ஒலியை விட சுமார் 1.6 மடங்கு வேகத்தில், அதிகபட்சமாக 12 கி.மீ உயரத்தில் பறக்க முடியும். 12 கி.மீ உயரம் என்பது இமயமலையை விட அதிகமான உயரமாகும். இதன் ரேஞ்ச் 226,4 கி.மீ. அதாவது ஒரே நேரத்தில் காஷ்மீர் தொடங்கி முக்கால்வாசி இந்தியாவை இது கவர் செய்துவிடும். இதன் சிறப்பம்சமே, ரேடார் கண்களில் படாமல் தப்பிப்பதுதான். அதிவேகம் மற்றும் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்த விமானம் இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த டிரம்ப் ஆட்சிக்காலத்தில், ஏமன் மீது குண்டுகளை வீச சவுதி, அமெரிக்காவிடமிருந்து F-16ஐ வாங்கியது. ஆனால் இந்த தாக்குதலின் போது, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அம்சம் மூலம், F-16 அழிக்கப்பட்டது. இதுதான் உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு F-16 போர் விமானம் அழிக்கப்பட்ட தருணமாகும். அதன் பின்னர் இரண்டாவது முறையாக தற்போது ரஷ்யா நேரடியாக இந்த விமானத்தை அழித்திருக்கிறது. விமானி கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியையும் ரஷ்ய ஊடகமான TASS தெரிவித்திருக்கிறது.
இந்த தாக்குதலை உக்ரைன் மறுத்திருக்கிறது. நேரடியாக ரஷ்யா ஒன்னும் F-16ஐ தாக்கவில்லை, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். எது எப்படி இருந்தாலும், F-16 இரண்டாவது முறையாக வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
இந்த சம்பவத்திற்கு பிறகு உக்ரைனுக்கு F-16 போர் விமானத்தை வழங்க அமெரிக்கா கால தாமதம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2025ம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் F-16 விமானங்களை வழங்குவது என உக்ரைனுடன் பெல்ஜியம் மூலமாக அமெரிக்கா ஒப்பந்தம் போட்டியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி விமானம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும், 2026ல்தான் எதிர்பார்க்கப்பட்ட அளவில் விமானங்கள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரின் விளிம்பில் நின்றுக்கொண்டிருக்கும் உக்ரைனுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.