புத்தாண்டு 2025: கடந்த பத்து ஆண்டுகளாக வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கஷ்டங்களை சந்தித்து வந்த மகர ராசிக்காரர்களுக்கு வரும் புத்தாண்டில் என்ன விதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for magaram)
மன்னனாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் உண்மை உண்மைதான என்று சொல்லி, எங்கும் எப்போதும் நேர்மையான பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள் நீங்கள். என்னவிதமான கஷ்டம் வந்தாலும் நேர்வழியில் சம்பாதித்து நேர்மையாக வாழ நினைப்பவர்கள். குறுக்கு வழியில் கோடி கோடியாய் சம்பாதிப்பது தேவையில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அருமையான ஆண்டாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு விதமான கஷ்டங்களையும், சோகத்தையும் சுமந்து வந்திருப்பீர்கள். நிம்மதி இல்லாமல் தவித்து வந்திருப்பீர்கள். சொல்லிக் கொள்ள முடியாத பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். மனதுக்குள்ளேயே போட்டு வைத்திருந்த அனைத்து பிரச்னைகளும் உங்களை விட்டு விலகும். (Puthandu palan for magaram)
உங்கள் ராசியின் யோகாதிபதியான சுக்கிரனுடைய நட்சத்திரத்தில் இந்த வருடம் பிறந்துள்ளது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருக்கும்போது இந்த 2025 ஆம் ஆண்டு பிறக்கிறது. அதனால், எல்லா வகையிலும் அமோகமாக இருக்கப் போகிறீர்கள். பத்து வருடமாக போட்டு படாய் படுத்தி வந்த சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி உங்களை விட்டு விலகுகிறார். அத்துடன் ஏழரை சனி முழுமையாக உங்களை விட்டு விலகுகிறது.
ஏழரைச் சனி முடிவுக்குப் பிறகு அற்புதமான ஆண்டாக இருக்கும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் எப்போதுமே பறிகொடுத்தது போன்ற சோகமான சூழ்நிலை எல்லாம் மாறும். எல்லா விஷயங்களிலும் இனி ஜெயிக்கப் போகிறீர்கள். உங்களைப் பார்த்தும் பார்க்காமல் போனவர்கள் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள்.
சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை உண்டாகும். குரு பகவான் நல்ல இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மே மாதம் 14 ஆம் தேதி முதல் ஆறாம் வீட்டில் மறையப் போகிறார். அதனால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பி ஏமாறக் கூடாது. அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.
உங்களைப் பற்றி வீண் பழிகள், வதந்திகள் வரும். அதனை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டில் ராகு கேது பெயர்ச்சியும் இருப்பதால் மே மாதம் 18 ஆம் தேதி முதல் ராகு பகவான் இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். கேது பகவான் எட்டாவது வீட்டில் வந்து அமர்கிறார்.
பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. மனதுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமோகமான காலமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும்.
2025 ஆம் ஆண்டில் நீங்கள் தொட்ட காரியங்களில் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாளை திருப்பதி சென்று வழிபட்டு வருவது நல்லது. தேங்காய் தானம் கொடுக்கலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக் கொடுக்கலாம். அன்னதானம் அளிப்பது நல்ல பலனைத் தரும்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.