வரலாற்று அடையாள அழிப்பு: குமரி திருவள்ளுவர் சிலையை பேரறிவு சிலை என பெயர் மாற்றக்கூடாது: யார் பாருங்க

post-img
சென்னை: திருக்குறளையும், திருவள்ளுவரையும் தி.மு.க., எப்போதும் போற்றி வருகிறது என்று கூறி நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு பேரறிவு சிலை என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். ஆனால், குமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை,'பேரறிவு சிலை' எனப் பெயர் மாற்றக் கூடாது என்று தமிழக அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. கால் நுாற்றாண்டு கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்க இருக்கும் சிலைக்கு, 'பேரறிவு சிலை' என, பெயர் சூட்டி தி.மு.க., அரசு மகிழ்கிறது. திருக்குறளையும், திருவள்ளுவரையும் தி.மு.க., எப்போதும் போற்றி வருகிறது" என்று எழுதியிருந்தார். மேலும், கன்னியாகுமரிக்கு நேற்று வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையின் நுழைவுவாயிலில் "பேரறிவு சிலை" (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார். புதிய கோரிக்கை: இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை,'பேரறிவு சிலை' எனப் பெயர் மாற்றக் கூடாது' என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில், மூன்று கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவே, 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டு பெருமைப்படுத்தியது பாராட்டுக்குரியது. சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, வெள்ளி விழாவாக கொண்டாடும் நேரத்தில், முதல்வர் ஸ்டாலின், இனி திருவள்ளுவர் சிலை, "பேரறிவு சிலை" என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஈவே ராமசாமி: திமுக அரசின் முன்னோடிகள் தங்கள் உண்மையான பெயரை மறைத்து, புதுப்பெயர்களை சூட்டி, தமிழர்களை ஏமாற்றினர். அதுபோல், திருவள்ளுவருக்கு புதுப்பெயர் சூட்டி, உண்மையான வரலாற்றை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறோம். திருவள்ளுவருக்கு பேரறிவு எனப் பெயர் சூட்டினால், அண்ணாதுரையும், ஈ.வெ.ராமசாமியும் ஒன்றாக தமிழ் படித்தனர் என, புதிய புனைவு கதை கட்ட ஏதுவாக இருக்கும் என்று நினைக்கின்றனரோ என்னவோ தெரியவில்லை. பேரறிவாளன் என்ற பெயர், முதல்வருக்கு பிடித்ததால் என்னவோ, இந்த பெயரை சூட்டுகிறாரா என்று சந்தேகிக்கிறோம். திருவள்ளுவர் சிலை என்பது திருவள்ளுவர் சிலை என்றே அழைக்கப்பட வேண்டும். பேரறிவு சிலை என அழைத்தால், அது ஒரு வரலாற்று அடையாள அழிப்பு. புதிய பெயர் சூட்டுதல், திராவிட மாடல் கருத்து திணிப்பு. வேண்டுகோள்: தமிழ் தேசிய அமைப்புகளும், ஹிந்து தேசிய அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும், இந்த பேரறிவு சிலை என்ற பெயர் மாற்ற அறிவிப்புக்கு, ஜனநாயக ரீதியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார் Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post