பத்து வருசம் கழித்து ரூ.1 லட்சத்தின் நிலைமை என்ன தெரியுமா? பணத்தின் மதிப்பு எப்படி ஆக போகுது பாருங்க

post-img
சென்னை: இன்று மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது பலருடைய கனவாக கூட இருக்கும். ஓரளவு சொகுசான மிடில் கிளாஸ் வாழ்க்கையை மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் வாழ்ந்து விட முடியும் என்பதே தற்போதைய நிலை. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து 1 லட்சம் கையில் இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என யோசித்து இருக்கிறீர்களா.. அது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம். மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெற்றால் தற்போதைய கால கட்டத்தில் நல்ல கவுரமான சம்பளமாக நினைக்கிறோம். ஒரு நடுத்தர குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த சம்பளம் போதுமானதுதான். கல்வி, வீடு போன்ற அடிப்படை தேவைகளை திருப்தி அடையும் வகையில் நிறைவேற்றிக்கொள்ள 1 லட்சம் சம்பளம் போதுமானதுதான் என்பது மக்களின் எண்ணமாக இருக்கும். பணவீக்கம் காரணமாக பணத்தினுடைய மதிப்பு குறைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த விலைவாசியை தற்போது உள்ள விலைவாசியுடன் ஒப்பிட்டு பார்த்தாலே எளிதாக இது தெரிந்து விடும். அதிகரித்து வரும் பணவீக்கம் காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் பார்த்தால் தற்போது உங்கள் கைகளில் 1 லட்சம் இருந்தால் அதன் மதிப்பு 10 ஆண்டுகளில் எவ்வளவாக இருக்கும் என நினைத்து பார்த்து இருக்கிறீர்களா? அது குறித்த விவரங்களை பார்க்கலாம். 6 சதவித பண வீக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்ச ரூபாயின் மதிப்பு தோராயமாக ரூ.55,840 ஆக குறைந்துவிடும். 20 ஆண்டுகள் கழித்து மேலும் குறைந்து ரூ.31,180 ஆகவும், 30 ஆண்டுகள் கழித்து இதன் மதிப்பு ரூ.17,140 ஆக இருக்கும் இன்று மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது பலருடைய கனவாக கூட இருக்கும். ஒரளவு சொகுசான மிடில் கிளாஸ் வாழ்க்கையை மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் வாழ்ந்து விட முடியும் என்பதே தற்போதய நிலை. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து 1 லட்சம் கையில் இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என பாருங்கள்.. எனவே தற்போதே அதற்கான திட்டமிடலுடன் செயல்படுவதே நல்லதாம். எதிர்காலத்திற்காக சேமிப்பவர்கள் இதையும் கவனத்தில் வைத்தே முதலீடுகளை செய்ய வேண்டும். தற்போதுள்ள மதிப்புக்கு நிகராக இருக்கும் படி எதிர்காலத்திலும் பெரிய வருமானத்தைப் பெறக்கூடிய இடத்தில் முதலீடு செய்தால் ஓரளவு பணவீக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது பொருளாதார நிபுணர்களின் வாதமாக உள்ளது. ஒரு லட்ச ரூபாயை விடுங்கள்.. உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வளவு இருக்குமாம் தெரியுமா? இதே 6 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிட்டால் தற்போதைய ஒரு கோடியின் மதிப்பு 10 ஆண்டுகள் கழித்து ரூ.55 லட்சத்து 84 ஆயிரமாக இருக்கும். அதாவது, இப்போது ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் பொருட்களின் விலை எதிர்காலத்தில் 1.79 கோடி ரூபாயாக மாறலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post