சிபில் ஸ்கோர் ஜீரோ ஆக இருந்தால் என்ன அர்த்தம்.. லோன் வாங்க என்ன செய்ய வேண்டும்? இதை நோட் பண்ணுங்க

post-img
சென்னை: இப்போதெல்லாம் நாம் எங்கு லோன் வாங்கச் சென்றாலும் சிபில் ஸ்கோர் எவ்வளவு என்ற கேள்வி தான் முதலில் வந்து விழுகிறது. சிபில் ஸ்கோர் ஒருவருக்கு இல்லை என்றால் அவரால் லோன் வாங்க முடியுமா.. ஏன் சிபில் ஸ்கோர் ஜீரோ எனக் காட்டுகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். லோன் வாங்க நீங்கள் எங்குச் சென்றாலும் முதலில் வரும் கேள்வி சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கு என்பது தான். சிபில் ஸ்கோரை பொறுத்தே எவ்வளவு தொகை லோன் கிடைக்கும், எவ்வளவு வட்டி என அனைத்தும் முடிவாகிறது. இதனால் சிபில் ஸ்கோரை செக் செய்யப் போனால் சிலருக்கு ஜீரோ எனக் கூட காட்டும். ஒருவருக்கு சிபில் ஸ்கோர் ஜீரோவாக இருக்க என்ன காரணம்.. இதைச் சரி செய்வது எப்படி ஆகிய கேள்விகளுக்கான விடையைப் பார்க்கலாம்.. ஆனால், அதற்கு முன்பு இந்த சிபில் ஸ்கோர் என்றால் என்ன.. இது எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பது குறித்துச் சிறு விளக்கம். ஒருவர் கடனை வாங்கி அதைச் சரியான முறையில் திருப்பி செலுத்துகிறாரா என்பதை டிராக் செய்து வைத்து இருப்பதே சிபில் ஸ்கோர் ஆகும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் என்ற அமைப்பு தான் இந்த சிபில் ஸ்கோரை வழங்குகிறது. பொதுவாக இது 300 முதல் 900 வரை இருக்கும். அதில் உங்களுக்கு 700க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் எளிதாக லோன் கிடைக்கும். வாங்கும் கடனை சரியான நேரத்தில் திரும்பச் செலுத்துவது, பேமெண்ட் ஹிஸ்டரி, எவ்வளவு முறை லோன் கோரி விண்ணப்பிக்கிறோம், கிரெடிட் மிக்ஸ் எனப் பல விஷயங்களை அடிப்படையாக வைத்து இது தீர்மானிக்கப்படுகிறது. இப்போது எங்குச் சென்றாலும் சிபில் ஸ்கோரை தான் முதலில் கேட்பார்கள் எனவே அதைப் பராமரிக்க வேண்டியது முக்கியமானதாகும். அதாவது இது நீங்கள் கடந்த காலத்தில் வாங்கிய கடனை எந்தளவுக்குத் துல்லியமாகத் திருப்பி செலுத்தியுள்ளீர்கள் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்படுவதே ஸ்கோர். எனவே, நீங்கள் புதிதாக லோன் வாங்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது. அல்லது சிபில் ஸ்கோர் ஜீரோவாக இருக்கும். எனவே, நீங்கள் அதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம் ஜீரோ சிபில் ஸ்கோர் இருந்தால் பொதுவாக யாரும் பெரிய தொகையை உடனே லோன் தர மாட்டார்கள். இதற்கு நீங்கள் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். முதலில் சிறு தொகைக்கு லோன் வாங்கி அதை முறையாகச் செலுத்தலாம்.. அல்லது இஎம்ஐ முறையில் எதாவது ஒரு பொருளை வாங்கி அதை உரிய நேரத்தில் செலுத்தலாம். இஎம்ஐ என்பதும் கடன் தான் என்பதால் அப்படிச் செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும். அப்படி இல்லையென்றால் கிரெட்டி கார்டு வாங்கி, அதில் செலவு செய்யும் தொகையைப் பாக்கி வைக்காமல் முழுமையாகச் செலுத்தி வாருங்கள். பொதுவாகச் சம்பள கணக்கை வைத்திருக்கும் வங்கியில் சிபில் ஸ்கோர் இல்லையென்றாலும் கிரெட்டி கார்டு தருவார்கள். அல்லது குறிப்பிட்ட தொகையைக் கட்டி கிரெட்டி கார்டு பெறும் ப்ரீபெய்ட் கார்டு முறையில் கிரெட்டி கார்டு வாங்கலாம். இதை நீங்கள் செய்தால் ஆறு மாதத்தில் சிபில் ஸ்கோர் நல்ல நிலைக்கு வந்துவிடும். அவ்வளவு காலம் எல்லாம் காத்திருக்க முடியாது.. என்றால் உங்களுடன் நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் நபரைச் சேர்த்து லோன் கோரி விண்ணப்பிக்கலாம். அப்படிச் செய்யும் போதும் உங்கள் லோன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்கவும். மற்றொரு முக்கியமான விஷயம்.. இந்த சிபில் ஸ்கோர் என்பதைக் கடன் வாங்கவும்.. அதை உரிய முறையில் திருப்பி செலுத்துகிறார்களா என்பதை டிராக் செய்யவும் மட்டுமே. நீங்கள் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த திட்டமிட்டால் இந்த சிபில் ஸ்கோர் உங்களுக்குப் பெரிதாகத் தேவையே படாது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post