சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 4 அறைகள் தரைமட்டாகின! 6 பேர் பலி

post-img
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்ததில் 6 பேர் பலியாகிவிட்ட சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 4 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 4 அறைகளும் தரைமட்டமாகிவிட்டன. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post