தாலிபான்களுக்கு பாகிஸ்தான் வைத்த செக்? உதவி கேட்டது யாரிடம் பாருங்க! இவங்க பரம எதிரியாச்சே? ட்விஸ்ட்

post-img
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ளது. இதில் தாலிபான்களின் கை ஓங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் தற்போது இன்னொரு நாட்டிடம் உதவி கோரியுள்ளது. பாகிஸ்தான் ஏன் குறிப்பிட்ட அந்த நாட்டை அணுகி உள்ளது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு போரை தொடங்கி தான் தாலிபான்கள் அரியணை ஏறின. இதனால் தாலிபான் அரசை பல நாடுகளும் ஏற்கவில்லை. மாறாக தாலிபான் அரசை முதல் முதலாக அங்கீகரித்தது பாகிஸ்தான் தான். ஆனால் தற்போது இருநாடுகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தான் காரணம். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள டிடிபி அமைப்பினர் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதில் 47 பேர் வரை பலியாகினர். இதில் 20க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் வலுவடைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் டிடிபி அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடக்கிறது. இதில் தாலிபான்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானிடம் சரணடைந்து ஓடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான், தாலிபான்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பிற நாடுகளிடம் உதவி கோர தொடங்கி உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் முதல் முதலாக அணுகி உள்ள நாடு தஜிகிஸ்தான். அதாவது கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அசிம் மாலிக் தஜிகிஸ்தான் சென்று அந்த நாட்டின் அதிபர் எமோமாலி ரஹ்மானுடன் சந்தித்தார். இந்த சந்திப்பு என்பது தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பி நகரில் நடந்தது. அப்போது இருநாட்டு தலைவர்களும் இருநாடுகளின் உறவுகள், பிராந்திய அமைதி, பாதுகாப்பு குறித்து விவாதித்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானுக்கு, தாலிபான்களால் ஏற்பட்டுள்ள மிரட்டல், அவர்கள் நடத்தி வரும் தாக்குதல் உள்ளிட்டவை பற்றி ஐஎஸ்ஐ தலைவர் அசிம் மாலிக் எடுத்து கூறி உதவி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் என்ன சொன்னார்? என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை. இருப்பினும் அவர் பாசிட்டிவ்வான பதிலை தான் கூறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆப்கானிஸ்தானின் நடக்கும் தாலிபான்களின் ஆட்சிக்கு தொடக்கம் முதலே தஜிகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியை தாலிபான்கள் கவிழ்த்ததில் இருந்து தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தஜிகிஸ்தான் உள்ளது. மேலும் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட குழுக்களின் பல தலைவர்கள் தஜிகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். அதாவது தாலிபான்களை எதிர்க்கும் அமைப்பான National Resistance Front (NRF) -ன் பல தலைவர்கள் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே உள்ளார். தற்போது இந்த என்ஆர்எஃப் அமைப்பு நிதி மற்றும் ஆயுத உதவிகளை எதிர்பார்த்து காத்துள்ளது. இது கிடைக்கும் பட்சத்தில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தாலிபான்களுக்கு எதிராக போரிட தயாராக உள்ளனர். அதோடு இவர்கள் பாகிஸ்தான் உதவி கிடைக்குமா? என்று காத்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மானை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை ஐஎஸ்ஐ தலைவர் சந்தித்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளது. எங்கள் மீது டிடிபி அமைப்பின் மூலம் தாக்குதல் நடத்த கூடாது. மீறி நடத்தினால் தஜிகிஸ்தான் வரை எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. அதன்மூலம் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் சைலன்ட் மெசேஜை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது தாலிபான்களுக்கு புது தலைவலியாக பார்க்கப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post