2024 ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு! அதிகாரப்பூர்வ தகவல்

post-img
டெல்லி: 2024-25 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. நாட்டின் ஜிடிபி 6.4% ஆகக் குறையும் என்றும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி குறையும் என்று கூறப்பட்டுள்ளது. 2023- 24 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2% இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகில் வளரும் நாடுகளில் முக்கியமானதாக இந்தியா இருக்கிறது. கொரோனா சமயத்தில் பல நாடுகளின் ஜிடிபி சரிந்த போதிலும், இந்தியாவின் ஜிடிபி மோசமான அளவுக்கு செல்லவில்லை. கொரோனா முடிந்த பிறகு இந்தியா பொருளாதாரம் சிறப்பாகவே வளர்ச்சி அடைந்து வந்தது. இதற்கிடையே இப்போது 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளைத் தேசிய புள்ளியல் அலுவலகம் கணித்துள்ளது. அதில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஜிடிபி 2024-25 நிதியாண்டில் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 8.2%ஆக இருந்த சூழலில், 2024-25 நிதியாண்டில் அது 6.4% குறையும் என்று தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மிதமான வேகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தளவுக்குப் பொருளாதாரம் மெதுவாக வளர்ச்சி அடைந்தது இல்லை. இது தொடர்பாகத் தேசிய புள்ளியல் அலுவலகம் என்எஸ்ஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023-24 நிதியாண்டிற்கான ஜிடிபி மதிப்பீடு (Provisional Estimate (PE) of GDP) 8.2% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2024-25 நிதியாண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாமினல் ஜிடிபி 9.7% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% ஆக இருந்துள்ளது. அதைத் தொடர்ந்தே மத்திய ரிசரவ் வங்கி வெளியிட்ட கணிப்பில் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தது. அதாவது முன்பு 7.2% வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்த நிலையில், அது 6.6%ஆக குறைத்து ரிசர்வ் வங்கி கணிப்பை வெளியிட்டது. ஆனால், அதைவிடக் குறைவான அளவே வளர்ச்சி இருக்கும் என்பதை இப்போது என்எஸ்ஓ அறிவித்துள்ளது. மந்தநிலை இருந்தபோதிலும், முக்கிய துறைகளின் வளர்ச்சி நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் வளர்ச்சி 3.8%ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில் 1.4% ஆக இருந்தது. அதேபோல கட்டுமானத் துறை 8.6 சதவிகிதம், நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் 7.3 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு இப்போது எவ்வளவு செலவாகிறது என்பதைக் காட்டுவதே PFCE. இந்த PFCE 2023-24 நிதியாண்டில் 4% மட்டுமே உயர்ந்த நிலையில், இந்தாண்டு அது 7.3% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது சரக்கு மற்றும் சேவைகளுக்கு மக்கள் செலவிடும் தொகை என்பது கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிகரித்துள்ளது. அதேபோல அரசின் செலவுகளும் கூட நடப்பாண்டில் 4.1% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post