வியப்பூட்டிய வில்லேஜ்.. மது, டி.ஜே பார்ட்டி இல்லாத திருமணத்துக்கு ரூ.21,000 பரிசு.. அதிசய அறிவிப்பு

post-img
சண்டிகர்: திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே. போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடாத குடும்பங்களுக்கு ரூ. 21,000 பரிசு வழங்குவதாக, கிராமம் ஒன்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருகாலத்தில் யாருக்குமே தெரியாமல், மறைந்து மறைந்து மது அருந்தி கொண்டிருந்தவர்கள் எல்லாம், இன்று வெளிப்படையாகவே விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் மது அருந்துகிறார்கள்.. அத்துடன் ஒருபடி மேலேபோய், கையில் மதுக்கோப்பையுடன் வீடியோ, போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடும் நிலைமைக்கு சென்றுவிட்டார்கள். கோயில் விழாக்கள் முதல் திருமண நிகழ்ச்சி, துக்க வீடு வரை, மது இல்லாமல் நிறைவடைவதில்லை என்ற எழுதப்படாத விதிகளையும் கொண்டுவந்துவிட்டார்கள். மது பார்ட்டி வைப்பதும், அந்த பார்ட்டிகளில் பங்கேற்பதும் அந்தஸ்துக்குரிய விஷயமாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், மது இல்லாத திருமணம் நடத்தினால், அவர்களுக்கு பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இசை நிகழ்ச்சி: பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில், பல்லோ என்ற கிராம பஞ்சாயத்து செயல்பட்டு வருகிறது. இந்த பல்லோ கிராமத்தில் சுமார் 5,000 மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில், திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே போன்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஊக்குவிக்காத குடும்பங்களுக்கு 21,000 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறது. இப்படியொரு முடிவை கிராம மக்கள் எடுத்திருப்பதற்கு காரணம், திருமண நிகழ்வுகளில் மது அருந்துவதும், டிஜே இசைக்கப்படுவதும், பல்வேறு சண்டை சச்சரவுகளில் வந்து முடிந்துவிடுகிறதாம். இதனால் உறவுகள் சீரழிகின்றன.. கல்யாணங்களில் டிஜே இசை சத்தமாக எழுப்பப்படுவதால், அது மாணவர்களின் படிப்பையும் பாதிக்கிறதாம். அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். தேவையற்ற அழுத்தம்: கிராம மக்கள் மேலும் கூறும்போது, "ஆடம்பரமாக திருமணம் செய்வது, தேவையற்ற அழுத்தத்தை குடும்பத்தினருக்கு ஏற்படுத்துகின்றன. திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளை தவிர்க்கலாம்.. அதேபோல கிராமத்தில் இயற்கை எரிவாயு ஆலை அமைக்கவும் பஞ்சாயத்து முன்வந்துள்ளது.. இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பஞ்சாயத்து சார்பில் விதைகள் இலவசமாக வழங்கப்படும்... கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகிறோம்.. இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றனர். ஊக்கப்பரிசு: இதுபற்றி ஊராட்சி தலைவரான சர்பாஞ்ச் அமர்ஜித் கவுர் சொல்லும்போது, திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும், மது அருந்துவதை தடுக்கவும் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்து இல்லாமலும், டிஜே இசையை இசைக்காமலும் இருந்தால் திருமண வீட்டாருக்கு ரூ.21 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post