திமுகவை டிஸ்டர்ப் செய்த.. அதிமுகவின் மூவ்.. வேற வழியே இல்லை.. அஸ்திவாரத்திலேயே கைவைக்கும் ஸ்டாலின்

post-img
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் கவனம் பெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக, பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என்று கூறப்படுகிறது. பாலியல் விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அரசியல் செய்து வரும் திமுக, யார் அந்த சார் ? என்கிற சொற்றொடரை தமிழகம் தழுவிய வேள்வியாக செய்து கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், யார் அந்த சார் ? என்பதை தங்கள் வாகனங்களில் அதிமுகவினர் ஒட்டி நூதன பிரச்சாரத்தை தமிழகம் முழுக்க முன்னெடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இங்கே திமுக சார்பாக மீண்டும் காங்கிரஸ் கூட்டணி களமிறங்குகிறது. அதேசமயம், இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்கிற விவாதங்கள், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவிடம் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்துப் போட்டியிட்டு வருகிற சீமானின் நாம் தமிழர் கட்சி, இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கலாமா? என்கிற யோசனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. காரணம், தமிழகம் முழுக்க பெரும்பாலான மாவட்டங்களில் சீமான் கட்சியை விட்டு மாவட்ட அமைப்புகள் காலியாகி கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை எப்படி முன்னெடுப்பது என்கிற குழப்பம் தான், இந்த முறை தேர்தலை புறக்கணிக்கலாம் என்கிற யோசனை. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவும் இந்த் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் கவனம் பெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக, பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கடந்த 1 வாரமாக இந்த பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் போஸ்டர் யுத்தமும் ஆரம்பித்துள்ளது. இது திமுக உடன்பிறப்புகளை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டிருக்கிறதாம். தற்போது பாஜகவும் இதே பாணியில் பாலியல் விவகாரத்தை திமுகவுக்கு எதிராக எடுக்க சீரியஸ் காட்டத்தொடங்கியிருக்கிறது. இதனால் திமுக தலைமை ஏக அப்-செட்டில் இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக பிரச்சாரத்தை முறியடிக்க, கொடநாடு கொள்ளை, கொலையின் பின்னணியில் உள்ள அந்த சார் யார்? என்று எடப்பாடிக்கு எதிரான பிரச்சார பாணியை நாமும் முன்னெடுக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டுப் போகப்பட்டுள்ளது. அதனால் திமுகவும், யார் அந்த சார் ? என்கிற பிரச்சார விளம்பர போஸ்டர் யுத்தத்தை தொடங்கலாம் என்கிறது திமுக தரப்பு. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post