இஸ்ரோவின் புதிய தலைவராக வி நாராயணன் நியமனம்.. மத்திய அரசு உத்தரவு

post-img
டெல்லி: இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணன் தற்போது இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக உள்ளார். வரும் 14 ஆம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக இவர் பதவியேற்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது. இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளிட்டுள்ளது. அதில் இஸ்ரோவின் 11வது தலைவராக வி நாராயணன் நியமனம் செய்யப்படுகிறார் என்றும், வரும் 14 ஆம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக பதவியேற்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது வி நாராயணன் உள்ளார். இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்பிஎஸ்சியின் இயக்குனரக பணியற்றியுள்ளார். இஸ்ரோவின் 11-வது தலைவராக வி.நாராயணன் பதவியேற்க உள்ளார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். பணியாளர் நலத்துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு வெளியிட்ட அறிவிப்பில் இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய அமைச்சரவையின் நியமன குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமிகத்துள்ளது. 14.01.2025 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பார் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை.. எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த வி. நாராயணன் எல்.பி.சி.இயின் இயக்குனராக தற்போது உள்ளார். இஸ்ரோவில் பல முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post