ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று!

post-img
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 39 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக பாஜ எம்பி பிபி சவுத்ரி உள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இன்றைய கூட்டுக்குழு கூட்டத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், குழு உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் குறித்து விளக்க உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு 21,500-க்கும் அதிகமானோரிடம் இருந்து கருத்துகளைப் பெற்றது. 80% கருத்து ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கு ஆதரவாக இருந்தது. இதைத்தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்தன. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் என்றும், நாட்டை 'சர்வாதிகாரத்தை' நோக்கி அழைத்துச் செல்லும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டின. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச மசோதா மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கப் போவதில்லை என்றும், ஆனால் இந்த மசோதா முற்றிலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்றும் சட்ட அமைச்சர் மேக்வால் விளக்கம் அளித்தார். மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 198 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் சபையின் ஒப்புதலுக்குப் பிறகு மேக்வால் 'யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024' ஐ அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜேபிசி எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. இக்குழு 90 நாட்களில், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். ஜேபிசி பரிசீலனைக்குப் பின், இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 39 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக பாஜ எம்.பி பிபி சவுத்ரி உள்ளார். கூட்டத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், குழு உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் குறித்து விளக்குவார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post