6 + 6.. ஆறு சகோதரிகளை திருமணம் செய்த ஆறு சகோதரர்கள்.. காரணத்தை கேட்டால் ஆச்சயரிப்படுவீங்க.. சூப்பர்ல

post-img
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது.. இந்த திருமண நிகழ்வுதான், சோஷியல் மீடியாவிலும் கடந்த 2 நாட்களாகவே வட்டமடித்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது? ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரர்கள், இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்திருக்கிறார்கள்.. அதுவும் வரதட்சணையே வாங்காமல் மிகமிக எளிமையான முறையில் இந்த கல்யாணத்தை செய்து கொண்டுள்ளார்கள். அதாவது மாப்பிள்ளை, பெண் வீட்டு தரப்பில என மொத்தமே 100 பேர்தான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய போதனைகளின்படி, திருமணத்தில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான், மணமகன்களின் விருப்பமாக இருந்துள்ளது. இந்த 6 சகோதரர்களின் மூத்த சகோதரர் சொல்லும்போது, "நாங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க விரும்பினோம்.. இடங்களில் திருமண செலவுகளுக்காக மக்கள், பாடுபட்டு சம்பாதித்து வாங்கின நிலங்களையும் விற்கிறார்கள்.. அல்லது கடனை வாங்கி சிக்கி கொள்கிறார்கள்.. ஆனால், திருமணங்கள் எளிமையானவை என்பதை காண்பிக்கவும், தேவையற்ற நிதி நெருக்கடியில் சிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தவும்தான், இப்படியோரு முடிவை எடுத்தோம்" என்கிறார். அதுமட்டுமல்ல, 6 சகோதரர்களும் ஒன்றாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே தீர்மானித்து வைத்திருந்தார்களாம்.. அதனால் இவர்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை, மற்ற சகோதரர்கள் காத்திருந்தார்களாம். மணமக்கள் வீட்டார் இடமிருந்து, ஒரு பைசா கூட, வரதட்சணை வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துள்ளதற்கு, பாகிஸ்தானில் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இந்த சகோதர, சகோதரிகளின் திருமண போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. இந்த மணமக்களுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post