விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாத விஜய்! தவெகவுக்கு வேலை பார்க்கும் ஐஆர்எஸ்.. சூர்யா சிவா பகீர்!

post-img
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக முன்னாள் நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா, மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது அதிர்ச்சிகரமான தகவல் என கூறியுள்ளார். நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். மாணவர்கள் சந்திப்பு, கட்சி மாநாடு, புத்தக வெளியீட்டு விழா என கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிரடியாக அரசியல் செய்துவருகிறார். ஆனால், அவர் இன்னும் களத்திற்கு வரவில்லை. தொடர்ந்து ட்விட்டரில் கண்டனம், பனையூர் அலுவலகத்தில் நிவாரணம், தலைவர்கள் புகைப்படத்திற்கு மரியாதை என ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்து வருவதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வந்தாலும் விஜயின் அரசியல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக திமுக - பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜய்யை குறி வைத்து விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றன. காரணம் கட்சி மாநாட்டின் போது பாஜகவையும் திமுகவையும் தனது அரசியல் எதிரிகள் என விஜய் குறிப்பிட்டது தான். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக முன்னாள் நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா? தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. ஒருவர் 2016ல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் அவருக்கு வேலை செய்கிறார் என்பது தெரியும். அறியாத ஒரு செய்தி இந்த ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர் தற்போது மத்திய அரசு பணியில் வருமானவரித்துறையில் துணை ஆணையராக இருக்கும் திரு அருண்ராஜ் IRS என்பது. மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தை எடுக்க வைத்தது இந்த அருண்ராஜ் IRS என்ற அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பணி செய்வது மத்திய அரசிற்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் விஜய்க்கு நன்கு பரிட்சயமான இவரை அணுகி தான் ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு சுமார் 11 கோடி ரூபாய் வரை வாங்கி இருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் களத்திற்கு வராமல் பனையூர் அரசியல் செய்வதற்கு மிக முக்கியமான காரணமானவர்கள் இந்த இருவர்தான் என்று தவெக நிர்வாகிகளே புலம்புகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததற்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் காரணம் என்று தெரிந்துள்ளது!" என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post