உலகின் நம்பர் 1 யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் மண்டியிட்டு காதலிக்கு சர்ப்ரைஸ்.. யார் இந்த தியா பூய்சென்??

post-img
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 'மிஸ்டர் பீஸ்ட்' என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் தான் உலகின் நம்பர் ஒன் யூடியூபர் என்று போற்றப்படுகிறார். இவரை யூடியூப்பில் 34 கோடி பேர் பின்பற்றுகிறார்கள். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ஜிம்மி டொனால்ட்சன் தெரிவித்துள்ளார். இன்றைக்கு யூடியூப் சேனல்களை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை ஆரம்பித்துவிட்டார்கள்.யூடியூப் சேனல்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணவே முடியாது. வானில் உள்ள நட்சத்திரங்களை கூடஎண்ணிவிடலாம். யூடியூப் சேனல்களை எண்ணவே முடியாது. அந்த அளவிற்கு யூடியூப் சேனல்கள் அதிகமாகவிட்டது. பசுபிக் பெருங்கடலைவிடவும் யூடியூப் கடலின் ஆழம் பெரிதாகவிட்டது.. இது உவமையாக இருக்கலாம்.. ஆனால் உண்மையும் கூட.. ஏனெனில் அத்தனை சேனல்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை பேர் சேனல் நடத்துகிறார்கள் என்பதை போய் பார்த்தால் தான் தெரியும். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விஷயங்கள், பார்த்த விஷயங்கள், பழகிய விஷயங்கள், கற்க வேண்டியவை, அறிய வேண்டியவை என பலவற்றை யூடியூப்பில் பகிர்கிறார்கள். பலர் அன்றாடம் வீட்டில் நடக்கும் விஷயங்களை கூட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் என்ற பெயரிலும், காமெடி என்ற பெயரிலும் பதிவிடுகிறார்கள். இதில் கணிசமானோருக்கு வருமானமும் கிடைக்கிறது. உலக மக்களுக்கு யூடியூப் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தலமாக மட்டுமில்லாமல், பலருக்கும் வருமானம் தரும் இடமாக உள்ளது. இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் யூடியூபர் என்றால் ஜிம்மி டொனால்ட்சன் தான். அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன், மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். 'மிஸ்டர் பீஸ்ட்' யூடியூப் சேனல், தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இவர் வித்தியாசமான சாகச வீடியோக்கள், சாகச பயணங்கள் மேற்கொள்வது, கடினமான சவால்களை மேற்கொள்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் அவ்வப்போது தான் வீடியோக்களை யூடியூப்பில் பதிவிடுவார்.. அப்படி பதிவிடும் வீடியோக்களை சர்வ சாதாரணமாக 100 மில்லியன் முதல் 200 மில்லியன் மக்கள் பார்ப்பார்கள். இந்த நிலையில், யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன் , தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று தியா பூய்செனுக்கு ஜிம்மி டொனால்ட்சன் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை தெரிவித்துள்ளார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டதால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்துகொண்டார்கள்.. நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் ஜிம்மி டொனால்ட்சன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தியா பூய்சென் எழுத்தாளர் ஆவார். தியா பூய்சென் எ எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். ஸ்டெலன்போஸ்க் ( Stellenbosch) பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சட்டம் படித்துள்ளார். மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி டொனால்ட்சனை திருமணம் செய்ய உள்ளது குறித்து தியா பூய்சென், "இது எங்களின் வாழ்க்கை பயணத்தில் முக்கியமான தருணம் ஆகும். என்னைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கெனவே திருமணமானவர்கள். இந்த விஷயங்கள் குறித்து நாங்கள் ஏற்கெனவே ஒரே மாதிரி தான் எண்ணத்துடன் உள்ளோம். நாங்கள் குழந்தைகளை பற்றியும் 70 வயதில் எப்படி ஒன்றாக வாழப் போகிறோம் என்பதை பற்றியும் பேசுகிறோம் " எனத் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post