பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் கொள்முதல்.. விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

post-img
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்புகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.விவசாயிகள் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம். கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் (சென்னை தவிர) மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு வேளாண்மைத் துறை இணை இயக்குனர், கூட்டுறவுச் சங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும், சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களை தலைவராக கொண்டு உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளரை உறுப்பினராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், இக்குழுக்கள் மூலம் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னனுபரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட வாரியாக இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post