என்னப்பா போலாமா? பிச்சைக்காரர்களை போட்டுக் கொடுத்தால் ரூ.1000 பரிசு! சிறப்பு எண்களும் வெளியீடு!

post-img
போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிச்சைக்காரர்களின் தொல்லையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் குறித்த தகவல் அளித்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றாக இந்தூர் நகரம் இருக்கிறது. போபாலை விட அங்கு மக்கள் தொகை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இங்கு பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. பலர் அதனையே முழு நேர தொழிலாக செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தூரில் மட்டும் சுமார் 7,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் தொல்லை: அவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதும், ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வரை அவர்கள் பிச்சை எடுத்து சம்பாதிப்பதும் தெரிய வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஊரில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் முயற்சியில் இந்தூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதிரடி நடவடிக்கை: பல்வேறு சமூக அமைப்புகளும் மாநகராட்சி உடன் கைகோர்த்து பிச்சைக்காரர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் தர முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தூர் நகரத்தில் யாசகம் கேட்பதற்கும் யாசகம் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க முயன்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், பிச்சை போடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. பிச்சை எடுக்க தடை: ஏற்கனவே இந்தூரில் பிச்சை எடுப்பதும் பிச்சை போடுவதும், தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் அளித்தால் ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி இரண்டாம் தேதியே இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மேலும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காக சிறப்பு மொபைல் எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது இதை அடுத்து பொதுமக்கள் பலரும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்து வருகின்றனர். ரூ.1000 பரிசு: ஏற்கனவே இந்தூரில் பிச்சை எடுப்பதும் பிச்சை போடுவதும், தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் அளித்தால் ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி இரண்டாம் தேதியே இந்த நடைமுறை அவளுக்கு வந்துள்ளது. மேலும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காக சிறப்பு மொபைல் என்னும் அளிக்கப்பட்டுள்ளது இதை அடுத்து பொதுமக்கள் பலரும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்து வருகின்றனர். நல்ல வரவேற்பு: பிச்சைக்காரர்களை அகற்றும் இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அதிக அளவில் வழங்கி வருகின்றனர். பிச்சைக்காரர்கள் பற்றிய தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட சிறப்பு எண்ணில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டதாகவும், அவர்களில் 12 பேர் அளித்த தகவல் உறுதி செய்யப்பட்டு ஆறு பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சிங் கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post