சின்ன ஊட்டி மலர்ந்தது சென்னையில்.. செம்மொழி பூங்காவில் உதயமான மலர் கண்காட்சி! கட்டணம் எவ்ளோ பாருங்க

post-img
சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் இன்று முதல் மலர் கண்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது. இந்த செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று முதல் வரும் ஜனவரி 1 1ம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி பூங்கா, 700 வகையான தாவரங்கள், பல அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் உள்ள பிரபல தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பூங்கா: இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி துவங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ஊட்டியிலுள்ள தாவரவியல் பூங்காவை போலவே, செம்மொழி பூங்காவிலும் விதவிதமான செடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையீல் 800 வகையான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர அரிய வகை மரங்களும் உள்ளன. இந்த மலர் கண்காட்சிக்காகவே, கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் தருவிக்கப்பட்டன. அலங்கார வளைவுகள்: ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள், பேன்ஸி, பெட்டூனியா, கிரீம் டெல்பினியம், ஆப்பிரிக்கா சாமந்தி, பிக்கோனியா, காஸ்மோஸ், கைலேடியா, சால்வியா, பிளாக்ஸ், மடகாஸ்கர் ஆல்மண்ட், சங்குப்பூ, ஆரம் லில்லி, நீல டெய்சி போன்ற விதவிதமான ரகங்கள் மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர் தொட்டிகள் பூங்காவில் இடம்பெற்றுள்ளன... மேலும், பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30 லட்சம் மலர் தொட்டிகள் பெற்றுள்ள இந்த மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் துவங்கி வைத்துள்ளார். இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்... இதற்காக பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75, வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரப்பிரசாதம்: கடந்த ஆண்டும் இதே கட்டணம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. கடந்த வருடம் 10 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை லட்சக்கணக்கானவர்கள் கண்டு ரசித்திருந்தனர்.. பொதுமக்கள் தந்த அந்த உற்சாக வரவேற்பையடுத்துதான், இந்த வருடமும் மலர் கண்காட்சியில் வித, விதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது. ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு, சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் இந்த மலர் கண்காட்சியானது, வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post