சியோல்: தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்கு பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது 179 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்தில் 179 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம் தென் கொரியாவுக்கு வந்தது. தென் கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வருகை தந்துள்ளது. விமானத்தில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என மொத்தம் 181 பயணம் செய்துள்ளனர்.
விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடுபாதையில் நிற்காமல் வேகமாக விமானம் சென்றது. நேராக ரன்வே சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்து கரும்புகைகள் வெளியேறியது.
ஏர்போர்ட்டிலேயே விமானம் விபத்துக்குள்ளானதை பார்த்த பயணிகள் பீதியில் அலறினர். விமானம் விபத்தை பார்த்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 62 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த 198 பேரில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 179 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
179 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. விமானத்தில் இருந்து 2 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பாக உடனடியாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரன்வேயில் வேகமாக சென்று கொண்டிந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் வேகமாக செல்கிறது. ஓடுபாதையில் நிற்காமல் நேராக அங்கிருந்த சுவரில் வேகமாக மோதுகிறது.
மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனே கரும்புகை குபுகுபுவென பரவும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் தான் கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், 38 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் பெரிய அளவிலான விமான விபத்து
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.