ஆழ்கடல் டூ அமைதியான விண்வெளி வரை! இந்தியாவின் சாதனையால் வாய் பிளக்கப்போகும் சீனா!

post-img
டெல்லி: விண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆய்வில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இந்நாடுகளுக்கு சவால் விடும் வகையில், வரும் 2026ம் ஆண்டு விண்வெளிக்கும், ஆழ் கடலுக்கும் மனிதர்களை இந்தியா அனுப்ப இருக்கிறது. இது குறித்து அறிவியல் துறையின் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, "கடந்த சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்க்கடல் இயக்கம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த தருணத்தில் இதை நான் நினைவு கூற விரும்புகிறேன். இந்த திட்டத்தின்படி, நாம் ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்ப இருக்கிறோம். யோசித்து பாருங்களேன்.. விண்வெளிக்கும், ஆழ்கடலுக்கும் ஒரே நேரத்தில் நாம் மனிதர்களை அனுப்புவது விசித்திரமான தற்செயல் நிகழ்வாக இருக்கும். விண்வெளி பயணத்தை பொறுத்தவரை, இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட பயணம் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. 2026ம் ஆண்டு தொடக்கத்தில் விண்வெளி பயணம் சாத்தியமாகும். அதே நேரத்தில், ஆழ்கடல் பயணமும் கைகூடும். உலக நாடுகளுக்கு இந்தியா விரைவில் தலைமை பொறுப்பேற்க இருக்கிறது. இதற்கு ஆழ்க்கடல் ஆழ்வு நமக்கு மிக முக்கியமானதாகும். நம்மிடம் 7,500 கி.மீ தொலைவு கொண்ட கடற்கரை இருக்கிறது. அதே நேரம், கடல் வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. இதற்காக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். இந்த முயற்சிக்கு முன்னோடியாக இந்திய கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் (INCOIS) சேவை இருந்து வருகிறது. இம்மையத்தின் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள், இந்தியாவில் உள்ள கடலோர மக்களுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கடலோர மக்களுக்கு மிகுந்த பயனளித்து வருகிறது" என்று கூறியுள்ளார். INCOIS மையத்தில் நடந்த '2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியின் 20வது ஆண்டு நினைவேந்தல்' நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அமைச்சர் மேற்குறிப்பிட்டவற்றை கூறியுள்ளார். சமுத்ராயன் திட்டம்: இந்திய கடல் பகுதியில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஆழ்கடல் தொடர்பான புரிதல்களை மேம்படுத்தவும் சமுத்ராயன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தது. ஆனால் இந்த திட்டத்தை எதிர்பார்த்த காலகட்டத்திற்குள் செயல்படுத்த முடியவில்லை. இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பதிலேயே பெரிய சிக்கல், மனிதர்களை 6 கி.மீ ஆழத்திற்கு அனுப்பி, பத்திரமாக மேலே கொண்டுவருவதுதான். மனிதனை கொல்லும் அழுத்தம்: ஆழ் கடலில் சுமார் 100 மீ ஆழத்தில் மட்டுமே மனிதர்களால் நீந்த முடியும். ஆனால் சமுத்ராயன் ஆய்வு என்பது 6000 மீ ஆழத்தில் நடத்தப்படுவதாகும். இவ்வளவு ஆழத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாம் சென்றால், உடல் சிதறி ஆழ்கடலிலேயே நமது ஆய்வாளர்கள் இறந்துபோவார்கள். அவர்களின் சடலங்களை கூட நம்மால் மீட்டெடுக்க முடியாமல் போய்விடும். எனவேதான் பாதுகாப்பு அம்சம் மிகவும் முக்கியம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உள்நாட்டு தயாரிப்பு: இந்த திட்டத்திற்கு தேவையான நீர்மூழ்கி கப்பலை செய்வதற்கு மேலை நாடுகளிடமிருந்து ஐடியாக்களை பெற்றிருந்தாலும், இந்த கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. எனவேதான் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் போது, இந்தியா உலக நாடுகள் மத்தியில் பெருமையாக பேசப்படும். ஒரே நேரத்தில் விண்வெளியிலும், ஆழ்கடலிலும் இந்திய வீரர்கள் இருப்பார்கள். இந்த சாதனை மூலம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இந்த திட்டத்தின் மூலம் இந்தியா சவால் விடும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post