விடைபெறும் சகாப்தம்.. மன்மோகன் சிங் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

post-img
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. காலை 9.30 மணி வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தவர் மன்மோகன் சிங். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டு பிரதமராக பதவி வகித்த இவர், அதன்பிறகு ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். 92 வயதான மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி ஒய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் தான் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 9.51 மணி அளவில் காலமானார். இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மன்மோகன் சிங்கின் உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும் மலர் வளையம் வைத்து மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மன்மோகன சிங்கின் மறைவுக்காக வருகிற 1 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 7 நாட்களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும், இந்தியா முழுவதிலும், வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரக்கூடும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அஞ்சலிக்கு வைத்த பிறகு காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்ததும், அங்கு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகள் நடைபெறும். பின்னர் காலை 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post