சிவகிரியில் ரோட்டு கடைக்கு போன பாஞ்சாலி.. அத்தனைபேர் கூடியிருக்க இப்படியா நடக்கணும்? திணறிய தென்காசி

post-img
தென்காசி: சிவகிரி மெயின் ரோட்டில், மக்கள் கண்முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் தென்காசியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன். இவருடைய மனைவி பெயர் பாஞ்சாலி.. 39 வயதாகிறது.. நேற்றிரவு சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றுக்கு, பாஞ்சாலி சென்றிருக்கிறார்.. மெயின் ரோடு: சிவகாசி அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பாஞ்சாலியிடம் தகராறு செய்ததுடன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார்.. இதில் பலத்த காயமடைந்த பாஞ்சாலி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிவகிரியில் மெயின் ரோட்டிலேயே, பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை அங்கு ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து, தகவலறிந்த சிவகிரி போலீசார், விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்... அப்போதுதான், சமுத்திரவேல் என்பவரின் பெயர் அடிபட்டது. பாஞ்சாலி: வாசுதேவ நல்லூரை சேர்ந்த சமுத்திரவேலுக்கு 44 வயதாகிறது.. கூலி வேலை செய்து வருகிறாராம்.. இவர்தான், பாஞ்சாலியை கத்தியால் குத்திக் கொலை செய்தது, தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அப்போது போலீசில் சமுத்திரவேல் அளித்துள்ள வாக்குமூலம்: "பாஞ்சாலிக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.. இதையடுத்து, பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. இதனால் பாஞ்சாலியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர், மகன்கள் பெரியவர்களாகி விட்டதால் ஆசைக்கு இணங்க மறுத்தார். அதிரடி கைது: இந்நிலையில், அவர் கடைக்கு வந்தபோது நான் அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அப்போதும் அவர் மறுக்கவே சரமாரியாக கத்தியால் குத்தினேன். இதில் அவர் துடிதுடித்து இறந்துவிட்டார். என்னை போலீசார் பிடித்து விட்டனர்" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை சிவகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பாளை மத்திய ஜெயிலில் அடைத்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post