அம்மாடி என்னா ஸ்பீடு.. 180 கிமீ வேகத்தில் பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர்.. ஆனா சொட்டு நீர் கூட சிந்தல

post-img
டெல்லி: நமது நாட்டில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் போது கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கிடையே அடுத்தகட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களைக் கொண்டு வரும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கான மாதிரி வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அது பயன்பாட்டிற்கு வரவில்லை. எப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் பயன்பாட்டிற்கு வரும் என்பதில் மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இந்த காத்திருப்பு சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஏனென்றால் இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான சோதனை ஓட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களில் இந்த ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கடந்த மூன்று நாட்களாகச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது பல முறை அது மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உலகத்தர வசதிகளுடன் சேவையை வழங்கும் முன்பு, இந்த மாத இறுதி வரை சோதனை ஓட்டம் தொடரும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் லோட் செய்யப்பட்ட நிலையிலேயே சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது வெறுமன ரயிலாக இல்லாமல் உள்ளே பயணிகள் இருந்தால் எவ்வளவு எடை இருக்குமோ.. அதே அளவு எடையுடன் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சோதனை தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 180 கிமீ வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை செய்யப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரயிலின் உள்ளே கிளாஸ் ஒன்றில் தண்ணீரை முழுமையாக நிரப்பியுள்ளனர். ரயில் 180 கிமீ வேகத்தில் செல்லும் போதும் கூட அதில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே விழவில்லை.. அந்தளவுக்கு எந்தவொரு அதிர்வுகள் இல்லாமல் ரயில் சென்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் ரயில்வே துறையைப் பாராட்டி வருகிறார்கள். கடந்த ஜன. 1ம் தேதி ரோஹல் குர்த் முதல் கோட்டா வரை நடந்த 40 கிமீ நீளச் சோதனை ஓட்டத்தில் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டியது. அதே நாளில் கோட்டா- நாக்டா மற்றும் ரோஹல் குர்த்- சௌ மஹ்லா இடையே நடந்த சோதனை ஓட்டங்களில் முறையே மணிக்கு 170 கிமீ மற்றும் மணிக்கு 160 கிமீ வேகம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் முழுக்க வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை தொடரும் என்றும் லக்னோ பிரிவுக்கு உட்படப் பகுதிகளில் சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இருப்பினும், இம்மாத இறுதியுடன் சோதனைகள் முடிவடையும் நிலையில், அதன் பிறகு ஓரிரு மாதங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post