எல்பிஜி சிலிண்டர் விலை முதல் ஓய்வூதியம், FD விதிகள், அமேசான் வரை.. எல்லாமே இன்று முதல் மாறுகிறது

post-img
சென்னை: வழக்கமாக புதிய மாதம் தொடங்கும்போது, பல புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கமாகும். அந்தவகையில், புது வருடம் இன்று துவங்கியிருக்கிறது. இதையடுத்து, எல்பிஜி சிலிண்டர் விலை, ஓய்வூதியம், கார் விலைகள், ஓய்வூதியம், இபிஎஃப்ஓ, உள்ளிட்டவைகளில் இன்றுமுதல் சில மாற்றங்கள் ஏற்பட போகின்றன. வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியன்று, எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் தென்படும். 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து கணிசமான ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாக மாற்றப்படாமல் உள்ளது. அதனால், எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலை இன்று முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்துள்ளது பான் கார்டு: ஆதார் - பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்று டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அவ்வாறு பான் கார்டை ஆதாருடன் இணைக்காதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல வருமான வரியை தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாளாகும். வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் இன்று முதல் ரூ. 5000 அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல, இன்று முதல் ஏடிஎம் இயந்திரங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை EPFO அமைப்பு செயல்படுத்தவுள்ளது. இதற்கான பணிகளை தற்போது EPFO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதற்காக EPFO உறுப்பினர்களுக்கு ஒரு பிரத்தியேக ஏடிஎம் கார்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்களின் விலை: கார் விலை இந்த மாதத்திலிருந்தே உயரக்கூடும் என்கிறார்கள். மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், மகேந்திரா, ஹோண்டா, கியா, பென்ஸ் போன்ற நிறுவனங்கள், தங்களது வாகனங்களின் விலைகளை 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிக உற்பத்தி செலவுகள், அதிகரித்த சரக்கு கட்டணம், ஊதிய உயர்வு, அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் தான் இந்த கார்களின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். இன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதாவது, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை இந்தியா முழுவதிலுமுள்ள எந்தவொரு வங்கி கிளையிலும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு (Verification) எதுவும் தேவையிருக்காது. இந்த வசதி ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) பெரும் நிவாரணத்தை அளிக்கும். ஃபீச்சர் போன்களுக்கான புதிய அம்சம்: சமீபத்தில், ரிசர்வ் வங்கி ஃபீச்சர் போன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டது. இனிமேல் UPI 123Pay-ஐப் பயன்படுத்தி ரூ.10,000 வரை பணம் செலுத்தலாம். இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த வரம்பு ரூ.5,000-ஆக இருந்தது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இனிமேல், பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து 1 டிவியில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். 3வது டிவியில் பிரைம் வீடியோவை பார்க்க விரும்பினால், அவர் கூடுதல் சந்தா செலுத்த வேண்டுமாம். சேமிப்பு கணக்குகள்: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான் புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி புதிய விதிகள் அமலானால், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதத்திலும் மாற்றங்கள் எழலாம். விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாதுகாப்பற்ற கடன்களுக்கான வரம்பை, ரூ.1.60 லிருந்து, ரூ.2 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ள நிலையில், இன்று முதல், இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. டெபாசிட்: வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC-கள்) மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் (HFCs) ஆகியவற்றுக்கான நிலையான வைப்பு நிதி தொடர்பான விதிகளும் இன்று முதல் மாறக்கூடும் என தெரிகிறது. இந்த மாற்றங்களின் கீழ், டெபாசிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சில விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை எடுத்துக்கொள்வது, லிக்விட் அசெட்டின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் வைப்புகளை காப்பீடு செய்வது போன்றவைகளில் மாற்றங்கள் வருகின்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post