செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.. அகவிலைப்படி உயருது.. நாளை முதல் மாறும் முக்கியமான விஷயங்கள்

post-img
சென்னை: நாளை ஜனவரி 1 2025 செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. பல்வேறு அரசு சேவைகள், திட்டங்களில் மாற்றங்கள் வர உள்ளன. அவை என்ன மாதிரியான மாற்றங்கள் என்று இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளது. ஆதார் - பான் கார்டை இணைப்பதற்கான இறுதி நேரம் நெருங்கி வருகிறது. நவம்பர் 6ம் தேதி முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், அதேபோல் உங்கள் பான் கார்டை வைத்து செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும். ஜனவரி 1 முதல் கூடுதல் அபாரதங்கள் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்காக UAN ஆக்டிவேஷன் செய்ய மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு முந்தைய காலக்கெடு டிசம்பர் 15 ஆகும. வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது இந்த காலக்கெடுவை ஜனவரி 15, 2024 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன், நவம்பர் 30 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பொதுவாக EPFO சேவைகளை ஆன்லைனில் பெறுவதற்கு உலகளாவிய கணக்கு எண் (UAN) உள்ளது. இதை பயன்படுத்துவதற்காக முன் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். UAN என்பது 12 இலக்க எண் ஆகும், இது EPFO மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதை ஆக்டிவேட் செய்ய ஜனவரி 15ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதோடு EPFO உடன் இணைக்கப்பட்டு உள்ள வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும், இதனால் EPFO மூலம் பணம் வழங்கப்படும் போதெல்லாம், அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றப்படும். இதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும். ஜனவரி மாதம் இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்படும். PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஏஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும்.அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் அமலுக்கு வரலாம். ஜனவரி மாதமே அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அடிப்படை சம்பளம் - டிஏ இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2004ல், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு, அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி 50 சதவீத அளவை மீறிய போதிலும், அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்படாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக அகவிலைப்படி 50% தாண்டினால்.. அதை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பார்கள். இதனால் வரும் ஜனவரி மாதம் இரண்டும் இணைக்கப்படலாம் என்று தகவல் வருகிறது. சேமிப்பு கணக்குகள்: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்கலூக்கான் புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட உள்ளன. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களைத் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் மாற்றப்படலாம். காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரலாம். அதேபோல் ரூ.1,500 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை உள்ள ஆடைகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்படும். 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும். மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜனவரி மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்படும் இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post