டேட்டிங் ஆப்பில் 500 கணக்கு.. 200 ஃபேக் ஐடி.. 700 பெண்களை ஏமாற்றிய 23 வயது இளைஞர்! எப்படி தெரியுமா?

post-img
சென்னை: உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.. 700க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது அம்பலம் ஆகி உள்ளது. இதற்காக அவர் பயன்படுத்திய முறைதான் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர் பொறுப்பில் துஷார் சிங் பிஸ்ட் என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். 23 வயதே ஆகும் இந்த இளைஞர் பகல் நேரத்தில் எச். ஆர் என்றால் இரவு நேரத்தில் யு.எஸ் மாடல். ஆம்.. இரவு நேரத்தில் தன்னை அமெரிக்காவை சேர்ந்த மாடல் என்று சொல்லி.. பெண்களுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். டேட்டிங் செயலியில் துஷார் சிங் பிஸ்ட் 500 கணக்கு வைத்துள்ளார். அதாவது bumble தொடங்கி பல்வேறு செயலிகளில் 500 + கணக்கு வைத்துள்ளார். இந்தியாவில் ஓகே கியூபிட், பம்ப்பிள், டின்டர், ட்ருலீ மேட்லி, ஐஸில், ஹின்ச் என்று பல டேட்டிங் ஆப்கள் உள்ளன. இந்த ஆப்கள் எல்லாம் தங்களுக்கு என்று தனி தனி விதிகளை வைத்துள்ளன. ஆனால் இதன் ஒரே நோக்கம், உங்களுக்கான இணையை, காதலரை, அல்லது டேட்டிங் செய்ய நண்பரை தேடிக்கொடுப்பதுதான். லாக்டவுன் காலத்தில் தனியாக இருக்கும் பலர் தற்போது டேட்டிங் ஆப்களை நாட தொடங்கி இப்போது அந்த செயலிகள் பயன்பாடு உச்சம் தொட்டுள்ளது. . கணக்குகள் தொடக்கம்: முக்கியமாக கொரோனா தாக்குதலுக்கு பின் டேட்டிங் ஆப்களில் 20-25% பயனாளர்கள் அதிகரித்து இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தற்போது இருக்கும் சில டேட்டிங் ஆப்களில் வீடியோ சாட் செய்யும் வசதியும் உள்ளது. அதேபோல் சில டேட்டிங் ஆப்கள் "கடலை" போடுவது என்பதை தாண்டி, திருமணம் செய்யும் அளவிற்கு உறவுகளை இணைக்க தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் இதன் யூசர்கள் எண்ணிக்கை 128% உயர்ந்துள்ளது. அதேபோல் தினசரி பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கை 125% உயர்ந்துள்ளது என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. லாக்டவுன் பின்பு பலர் இப்படி டேட்டிங் ஆப்களை இன்ஸ்டால் செய்வதாகவும், நேரம் செல்ல செல்ல இதிலேயே பலர் மொத்தமாக மூழ்கிவிடுவதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இப்படி டேட்டிங் செயலியில் பலர் இணைவதை அறிந்து கொண்ட துஷார் சிங் பிஸ்ட் அதை பயன்படுத்தி பெண்களை ஏமாற்ற முடிவு செய்துள்ளார். அதற்காக டேட்டிங் செயலியில் இவர் 500 கணக்கு வைத்துள்ளார். அதாவது bumble தொடங்கி பல்வேறு செயலிகளில் 500 + கணக்கு வைத்துள்ளார். இதை பயன்படுத்தி பல பெண்களிடம் பேசி உள்ளார். ஒரு பெண்ணிடம் பேசி பழகி.. செய்வதை எல்லாம் செய்த பின் அந்த கணக்கை துஷார் சிங் பிஸ்ட் மூடி விடுவார். போன் நம்பரை மாற்றிவிட்டு டேட்டிங் செயலியில் வேறு கணக்கு தொடங்குவார். பிபிஏ படித்துள்ள இவர் இந்தியாவில் பணியாற்றினாலும்.. அமெரிக்காவில் நான் மாடலாக இருக்கிறேன். இந்தியாவிற்கு ஷூட்டிங்கிற்காக வந்துள்ளேன். தன்னுடன் அமெரிக்காவிற்கு வர மாடல் ஒருவர் தேவை கூறி பெண்களிடம் பேச தொடங்கி உள்ளார். இதன் மூலம் பெண்களிடம் நெருக்கமாக பழகி.. அவர்களை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏமாற்றி உள்ளார். அதோடு 200க்கும் மேற்பட்ட பொய்யான கணக்குகளை ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராமில் தொடங்கி உள்ளார் . அங்கும் இதே கதையை சொல்லி பெண்களை ஏமாற்றி உள்ளார். நான் மாடல்.. பல லட்சங்களை சம்பாதிக்கிறேன் என்று பொய்யாக கூறி.. பெண்களை பணம், பொருள் காட்டி ஏமாற்றி.. டேட்டிங் செய்து அவர்களை தனது ஆசைக்காக துஷார் சிங் பிஸ்ட் பயன்படுத்தி உள்ளார். பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போது வீடியோ, புகைப்படம் எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் பறித்தும் உள்ளார். பல பெண்களிடம் 4 கோடி ரூபாய்க்கு மேல் இவர் மிரட்டி பறித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் இதில் சிக்கி போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை தொடர்ந்தே போலீசார் துஷார் சிங் பிஸ்ட்டை கைது செய்துள்ளனர். அவரின் போனை வைத்து போலீசார் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post