13 வயசுல என்ன கொடுக்கணும்.. மகள் குறித்து சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.. குவியும் லைக்குகள்..!

post-img
சீரியல் நடிகை ஜெயஸ்ரீ பல்வேறு சீரியல்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர். சமீப காலமாக சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். சீரியலில் நடிக்கும் போது சக சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார். இந்த நட்சத்திரத்தின் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், காலத்தின் விளையாட்டு.. இவருடைய கணவர் ஈஸ்வர் சக நடிகை VJ மகாலட்சுமியுடன் தவறான தொடர்பில் இருந்ததும் அதன் பிறகு மிகப் பெரிய சர்ச்சைகள் வெடித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும். இந்த சர்ச்சைக்கு பிறகு VJ மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். நடிகர் ஈஸ்வர் தன்னை ஆன்மீக பயணத்தின் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். மனைவி, மகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஈஸ்வர் தன்னுடைய சில தவறான முடிவுகளால் தற்போது தனியாக இருக்கிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ தன்னுடைய மகள் குறித்து பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. அவர் கூறியதாவது, என்னுடைய மகளுக்கு 13 வயதாகிறது. அவள் 13 வயதில் எப்படி இருக்க வேண்டுமோ.. அப்படி இருந்தால் போதும். 13 வயதிலேயே பக்குவப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும்.. மெச்சூர்டான பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவள் 13 வயதில் எப்படி இருக்க வேண்டுமோ.. அப்படி இருந்தால் போதும். தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் 10 வயது, 15 வயதிலேயே.. 20,30 வயது பெண்களுக்கு நிகரான அறிவை அவள் பெற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. 13 வயதில் அவர் எப்படி தன்னுடைய வாழ்க்கையை கொண்டாட வேண்டுமோ.. அந்த அளவுக்கு கொண்டாடினால் போதும்.. அவளை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக அவளுக்கு ஒரு போன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதில் எந்த ஒரு சமூக விடுதலை ஆட்களும் கிடையாது whatsapp கூட கிடையாது அவள் பள்ளியில் இருந்து வரக்கூடிய தகவல்களை தெரிந்து கொள்ள ஒரு TAB இருக்கிறது. அதில் மட்டுமே whatsapp அவர் பயன்படுத்துவாள். பள்ளிக்கும் அவளுக்கும் உண்டான தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே அந்த வாட்ஸ் அப் பயன்படுகிறது. மற்றபடி youtube, facebook, instagram என எந்த சமூகவலைதள பக்கத்திலும் அவள் கிடையாது. எனக்கு மட்டுமே இன்ஸ்டாகிராமில் கணக்கு இருக்கிறது. அதை நான் தான் நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன் தவிர அவள் படிப்புக்கு தேவையான விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்வதற்கு மட்டும் அந்த TAB பயன்படுகிறது. அவளுடைய போனை வாங்கி பார்த்தால் போன் செய்வதை தவிர வேறு எந்த ஒரு Appபும் இருக்காது. அது அவளுக்கு தேவையும் கிடையாது. அவளுக்கு தேவையான வயதில் என்னென்ன தேவையோ அதனை பார்த்து பார்த்து செய்வதற்கு நான் இருக்கிறேன். அவளுடைய பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு என பேசி இருக்கிறார். கணவர் இல்லாமல் தனி தாயாக மகளை வளர்த்து வருகிறீர்கள். உங்கள் அணுகுமுறை அருமை சகோதரி என இவருடைய அந்த பேச்சுக்கு இணைய பக்கங்களில் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post