சென்னையிலே ஐடி வேலை.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஜனவரி 17 ம் தேதி இண்டர்வியூ

post-img
சென்னை: சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 17 ம் தேதி நடைபெற உள்ளது. டாடா குழுமத்தின் கீழ் டிசிஎஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்-ஸில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி சென்னையில் இயங்கும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இண்டர்வியூ எப்போது என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு: டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது ஜாவா ஸ்பிரிங்புட் (Java Springboot) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு குறிப்பிட்ட பிரிவில் 4 ஆண்டு அல்லது அதற்கு மேலான அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம்செய்யலாம். அதேபோல் விண்ணப்பம் செய்வோர் Java/J2EE hads on Coding-ல் திறம்பட செயல்பட வேண்டியிருக்கும். நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இதுதவிர டீமில் இருக்கும் ஜுனியர் ஜாவா டெவலப்பர்களுக்கு Guide செய்ய வேண்டி இருக்கும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tata Consultancy Services Limited, Kumaran Nagar, 415/21-24, TNHB Main Rd, Chennai, Tamil Nadu 600119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யபட வாய்ப்புள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்துவிட்டு நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ செல்வோர் ரெஸ்யூம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட தேவையான பிற சான்றுகளை கையில் வைத்திருப்பது நல்லது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post