சென்னையில் ஐடி வேலை.. பிசிஏ முதல் எம்எஸ்சி, எம்டெக் வரை படித்தவர்களுக்கு ஜாக்பாட்! அழைக்கும் Infosys

post-img
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். உலகின் பல்வேறு இடங்களில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு: இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது ஜாவா சாப்ட்வேர் டெவலப்பர் (Java Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்கபிரிங்க் புட் (Spring Boot), ஜாவா (Java) உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவா டெவலப்பர் ரோலில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஸ்ட்ராங் டெக்னிக்கல் ஸ்கில்ஸ், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தேவையென்றால் புதிய டெக்னாலஜியை கற்க ஆர்வமாக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் தேவையான அளவுக்கு வேலை தேடுவோர் விண்ணப்பம் செய்தால் விண்ணப்பம் செய்வதற்கான லிங்க் காலாவதியாகிவிடும். பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post