சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. 62 ஆயிரம் சம்பளம்! பிஇ முடிச்சிருக்கீங்களா? விண்ணப்பிங்க

post-img
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மெட்ரொ நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது சி.எம்.ஆர்.எல் நிறுவனம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (சிவில்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியகள் பணியாற்றி வருகிறார்கள். மெட்ரொ நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது சி.எம்.ஆர்.எல் நிறுவனம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (சிவில்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: உதவி மேலாளர் (சிவில்)-08 பணியிடங்கள். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஓபிசி என்றால் 13 ஆண்டுகளும் உச்ச வரம்பில் தளர்வு உண்டு. கல்வி தகுதி: பி.இ / பி.டெக் (சிவில்) படித்து இருப்பது அவசியம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அதாவது, பெரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் அல்லது மெட்ரோ ரயில் திட்டங்களில் பணியாற்றிய முன் அனுபவம் கோரப்பட்டுள்ளது. கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். முற்றிலும் இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுவார்கள். அதன் பிறகு தேவையின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வுக்கு பிறகு மருத்துவ பரிசோதனை அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேவையான கல்வித் தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.50 கட்டணம் ஆகும். https://chennaimetrorail.org/ என்ற வெப்சைட் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 10.02.2025 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://chennaimetrorail.org/wp-content/uploads/2025/01/Detailed-Employment-Notification-for-Emp-No.HR-CON-01-2025-dated-08-01-2025-Exclusively-for-Women-Candidates-only.pdf விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் விண்ணப்பதாரர்கள் CMRL டெலிபோன் எண்ணை (044-24378000) தொடர்பு கொள்ளலாம். பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Post