Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ஜனவரி 17 தான் கடைசி நாள்.. சென்னையில் பணி நியமனம்

post-img
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 17 ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: ஜோஹோவின் தற்போதைய அறிவிப்பின்படி டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். 2025ம் ஆண்டில் படிப்பை முடிப்போர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பிரிவில் குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்கா அல்லது பிரிட்டன் கஸ்டர்களுடன் போனில் பேசும் திறமை இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்று கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் மற்றும் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற ஆர்வமாக இருக்க வேண்டும். டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணியை பொறுத்தமட்டில் ள் வாய்ஸ், இ-மெயில் மற்றும் சாட் முறையில் டெக்னிக்கல் சப்போர்ட் வழங்க வேண்டியிருக்கும். ஆன்லைன் டெமோ மற்றும் கஸ்டமர் டிரெய்னிங் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் என்பது ஜனவரி 17 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 17 ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறுவிண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post