அனுபவம் வேண்டாம்.. ரூ.4 லட்சம் சம்பளத்தில் காத்திருக்கும் வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்

post-img
சென்னை: முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்துடன் பிற சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. டெலாய்ட் (Deloitte) நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர பிற மாநிலங்களின் பல்வேறு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: டெலாய்ட் நிறுவனத்தில் இருந்து தற்போது அனலிஸ்ட் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன்ல டெக்னாலஜி, அலைட் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்ட்ரிம்ஸ் மற்றும் அனைத்து சர்க்யூட்டல் பிராஞ்சஸில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்டெக், அல்லது IMtech 5 ஆண்டு படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜியில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் எம்சிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இந்த படிப்பை அனைவரும் 2025ம் ஆண்டில் முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜில் கோடிங் எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட்டில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். நல்ல அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். எந்த பணியாக இருந்தாலும் தனியாக செய்ய தயாராகஇருக்க வேண்டும். ஸ்டாக்ஹோல்டரிடம் நேருக்கு நேராக பேச தெரரிந்திருக்க வேண்டும். குளோபல் கிளைன்ட் உடனும் உரையாட தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு காலம் Probation காலம் இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்படுவார்கள் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதுதவிர Variable benefits-ம் உண்டு. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டெலாய்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விபரங்களை படித்து தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கான அறிவிப்பு மற்றும் கூடுதல் விபரங்கள் அறிய Click Here

Related Post