தென்காசி அரசு மருத்துவமனையில் வேலை.. மாதம் 23 ஆயிரம் சம்பளம்! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க

post-img
சென்னை: தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், தொழிற்சார் சிகிச்சையாளர், சமூக சேவகர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ 23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். தென்காசி மாவட்டத்தில் தேசிய நலவாழ்வுக் குழுமம் என்ற திட்டத்தின் கீழ் புதிதாக அரசு மருத்துமனைகளில் பதவிகள் உருவாக்கபப்ட்டுள்ளன. இந்த பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமூக சேவகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் விவரம்: * நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் -1 * தொழிற்சார் சிகிச்சையாளர் - 1 * சமூக சேவகர் - 1 என 3 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி: * இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (Special Education in Intellectual Disability) படித்து இருப்பவர்கள் நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். * தொழிற்சார் சிகிச்சையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை (Occupations Therapy) பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். * சமூக சேவகர் பதவிக்கு Master of Social work (MSW) படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்கள் 16.12.2024ன் படி, 40 வயது நிரம்பி இருந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 23,000 முதல் 23,800 வரை சம்பளம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிப்பது?: இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். முற்றிலும் தற்காலிகமானது தான் ஆகும். 11 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய வேண்டும். ஆப் லைன் மூலமாக இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். https://tenkasi.nic.in/notice_category/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 19 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரும்படி விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டும். . அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்-627811.

Related Post