கொச்சியில் இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்.. தமிழ்நாடு இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

post-img
கன்னியாகுமரி: கொச்சின் எர்ணாகுளம் பி.டி.உஷா சாலை ஷெனாய்ஸ் மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைத்து வருகிற 28-1-25 முதல் 6-2-25 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு (மருந்தாளுனர் போட்டியாளர்கள்) நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் பங்கேற்லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கும் விமானப்படையில் வேலைக்கு சேர வேண்டும் என்று ஆசை இருக்கும். மத்திய அரசு பணி, தேசத்திற்கு வேலை செய்யும் பணி, நல்ல சம்பளம், நல்ல ஓய்வூதியம், வாழ்க்கை தரமே மாறும் என்பதால் பலரும் விமானப்படையில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.. விமானப்படையில் வேலைக்கு அவ்வப்போது ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் தற்போது கொச்சியில் ஆட்கள் தேர்வு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்திய விமானப்படைக்கான நேரடி ஆள்சேர்ப்பு முகாம் கொச்சின் எர்ணாகுளம் பி.டி.உஷா சாலை ஷெனாய்ஸ் மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைத்து வருகிற 28-1-25 முதல் 6-2-25 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு (மருந்தாளுனர் போட்டியாளர்கள்) நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அவ்வாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மருத்துவ உதவியாளர்களுக்கு (பொது போட்டியாளர்கள்) 29-1-25 அன்று நேரடி தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு கல்வி தகுதி 10, பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ, பி.எஸ்.சி., பார்மஸி ஆகும். மேலும் ஜூலை 2004 முதல் ஜூலை 2008-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதுபோல மருத்துவ உதவியாளர்களுக்கு (மருந்தாளுனர் போட்டியாளர்கள்) 4-2-25 அன்று நடக்கிறது. இவர்களுக்கு கல்வி தகுதி டிப்ளமோ, பி.எஸ்சி., பார்மஸி ஆகும். ஜூலை 2001 முதல் ஜூலை 2006-க்குள் பிறந்தவர்களாக இருக்கு வேண்டும். மேலும் அதிகாலை 5 மணிக்குள் ஆள்சேர்ப்பு முகாமுக்குள் ஆஜராக வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post