ஜனவரி 18 ம் தேதி சென்னையில் இன்டர்வியூ.. டிசிஎஸ் ஐடி நிறுவனம் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க

post-img
சென்னை: டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஜனவரி 18 ம் தேதி நடைபெற உள்ளது. டாடா குழுமத்தின் கீழ் டிசிஎஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இப்போது டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு: தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் PL/SQL Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.அதன்படி Oracle SQL, PostGreSQL & PL/Sql உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் writing complex Stored procedures, Packages, Functions and triggers, எஸ்க்யூஎல் குவாரிஸ் எழுதுவது உள்ளிட்டவற்றிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். யுனிக்ஸ் டெவலப்மென்ட் (Unix development) மற்றும் ஷெல் ஸ்கிரிப்டிப்(shell scripting) திறமை என்பது இருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 18 ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் TCS - Sholinganallur, Kumaran Nagar, 415/21-24, TNHB Main Rd, Chennai, Tamil Nadu 600119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யபட வாய்ப்புள்ளது. அதேபோல் பணி நியமனம் எங்கு செய்யப்படும் என்பது பற்றியும் கூறப்படவில்லை. இதுபற்றி கடைசிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்துவிட்டு நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ செல்வோர் ரெஸ்யூம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட தேவையான பிற சான்றுகளை கையில் வைத்திருப்பது நல்லது. பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post