எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 600 பணியிடங்கள்.. 85 ஆயிரம் சம்பளம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

post-img
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். ஏனென்றால் இன்றே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி உள்ளது. நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார்கள். இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது இந்த வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம். காலிப்பணியிடங்கள் விவரம்: எஸ்பிஐ வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளுக்கான 600 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருந்தால், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயதானது 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி மற்றும் இவிஎஸ் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.48,000 முதல் 85,000 வரை வழங்கப்படும். தேர்வு முறை: இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். முதலில் முதல்நிலை தேர்வு நடைபெறும். பிறகு மெயின் தேர்வும், குரூப் டிஸ்கசன்ஸ், இண்டர்வியூ மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி இதில் எந்த மொழியில் தேர்வு எழுத வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்களே தேர்ந்தெடுக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது?: ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்ற இணையதள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இன்றே 16.01.2025 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.

Related Post