பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. தேர்வு கிடையாது.. 1.35 லட்சம் சம்பளம்.. தேதி முடிய போகுது!

post-img
சென்னை: பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜூனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்பட மொத்தம் 1,267 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும். பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பேங்க் ஆப் பரோடா வங்கி. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஜூனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்பட மொத்தம் 1,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பன போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: வேளாண் சந்தைப்படுத்தல் அதிகாரி - 150 விவசாய சந்தைப்படுத்தல் மேலாளர் - 50 மேலாளர் - விற்பனை - கிரேடு/ஸ்கேல் II - 450 மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் பிரிவு - கிரேடு/ஸ்கேல் II - 78 மூத்த மேலாளர் - கடன் ஆய்வாளர் - தரம்/அளவு III - 46 மூத்த மேலாளர் - MSME உறவு - தரம்/அளவு III - 205 தலைவர் - SME பிரிவு - கிரேடு / ஸ்கேல் IV - 12 என மொத்தம் 61 வகையான பணியிடங்களில் 1267- சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வித் தகுதியானது மாறுபாடும். துறை சார்ந்த பிரிவில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளவும். வயது வரம்பு: 24 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளம் எவ்வளவு?: ஜூனியர் மேனேஜர் அளவிலான பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 48,480 முதல் 85,920/- வரையும், மிடில் லெவல் பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 85,920 முதல் 1,05,280/-வரையும், சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 1,20,940 முதல் 1,35,020/- வரையும் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ 600 ஆகும். எஸ் சி மற்றும் எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறும். எப்படி விண்ணப்பிப்பது?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாளாகும். எனவே தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை செய்யவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-12/Advertisement-Regular-27-12-2024-26-20.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Related Post