வாடகை மட்டும் ஒரு லட்ச ரூபாய்.. சொகுசு ஹோட்டலை மிஞ்சும் மகா கும்பமேளா கூடாரங்கள்! வாவ் வசதிகள்

post-img
லக்னோ: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் தங்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி ரூ.1500 வாடகையில் தொடங்கி, அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கூடாரங்கள் வரை தங்குமிட ஆப்ஷன்கள் ஏகப்பட்ட உள்ளது. இவை எங்குள்ளன.. இதில் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இந்துக்களின் மிக முக்கிய நகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகா கும்பமேளா வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்கள் தங்க அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி ரூ.1500ல் பட்ஜெட் விலையில் தொடங்கி, ஒரு லட்சம் வரை சொகுசு கூடாரங்கள் வரை உள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம். TUTC எனப்படும் அல்டிமேட் டிராவலிங் கேம்ப் என்ற நிறுவனம் பிரயாக்ராஜில் 40 சொகுசு கூடாரங்களை அமைத்துள்ளது. கும்பமேளாவில் இதுபோல சொகுசு கூடாரங்களை அமைப்பது இது மூன்றாவது முறையாகும். இந்த சொகுசு கூடாரங்களில் குளியலறைகள், வெப்பம் & சூடான நீர் வசதி மற்றும் ஆன்-சைட் உணவகம் எனப் பல சொகுசு வசதிகள் உள்ளன. இந்த சொகுசு கூடாரத்தில் தங்குவதற்கு தினசரி ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தி அல்டிமேட் டிராவலிங் கேம்ப்பின் தலைமை இயக்க அதிகாரி ரஜ்னிஷ் ராய் கூறுகையில், "பெரிய பெரிய தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், பெருநிறுவன சிஇஓக்கள் ஆகியோர்தான் எங்கள் கூடாரங்களில் தங்குகிறார்கள். கும்பமேளா நடைபெறும் வளாகத்திலேயே நாங்கள் எங்கள் கூடாரங்களை அமைத்துள்ளோம். இதில் எக்ஸிக்யூடிவ், லக்சரி என்று வகையான ரூம் இருக்கிறது.. 400 முதல் 500 சதுர அடி வரை இந்த சொகுசு ரூம்கள் உள்ளன. மேலும், சாத்விக் சைவ உணவுகளைச் சிறப்பாகத் தயாரித்துப் பரிமாறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார். தங்குமிட சேவை மட்டுமின்றி மகா கும்மேபளாவில் புனித நீராடும் பகுதிக்கு விருந்தினர்களை நேரடியாகப் படகு மூலம் அழைத்துச் செல்லவும் தேவையான படகு சேவைகளையும் இதில் நம்மால் பெற முடியுமாம். மேலும், விருந்தினர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அருகே உல்ல மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து நேரடியாக ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை அளிப்பார். மேலும், விமான நிலையத்தில் இருந்து பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இப்படி கிட்டதட்ட ஒரு சொகுசு ஹோட்டல் வசதியைக் கொண்ட கூடாரத்திற்கு வாடகையாக ஒரு லட்சம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஐஆர்சிடிசி சார்பில் மகா கும்பமேளா டென்ட் சிட்டி என்ற பெயரிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது புனித நீராடும் இடத்தில் இருந்து சுமார் 3.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கூடாரங்களில் தங்குவதற்கு தினசரி ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏசி, கழிப்பறை, வை-பை, 3 நேர உணவுகள் ஆகியவை அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தவிர உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பிலும் கூடாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ரூ.1500 முதல் ரூ.35,000 வரை பல்வேறு வகைகளில் இங்கு ரூம்கள் உள்ளன. இந்த கூடாரங்களில் அதிகபட்சம் 2,000 பேர் வரை தங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post