1 ட்ரில்லியனை நோக்கி நடைபோடும் தமிழ்நாடு! சென்னையில் நடக்கும் மாபெரும் Umagine TN2025 வர்த்தக மாநாடு

post-img
சென்னை: சென்னையில் Umagine TN 2025 வர்த்தக மாநாடு நடக்க உள்ளது. கடந்த வருட வர்த்தக மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடந்த நிலையல் மீண்டும் Umagine TN 2025 வர்த்தக மாநாடு இன்றும் நாளையும் நடக்க உள்ளது. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஏற்றபடி தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது. சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு செல்ல வேண்டிய முதலீடுகள் தமிழ்நாட்டிற்கே வருகின்றன. Foxconn, Hyundai, Vinfast, Tata Power , Jabil , Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் தமிழ்நாட்டை கொண்டு செல்லும் வகையிலும் நிறைய முதலீடுகள் வர தொடங்கி உள்ளன. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான மொத்த ப்ளூ பிரிண்ட், தமிழ்நாட்டின் கொள்கை மாற்றங்கள், சாலை கட்டுமானங்கள் என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தினம் தினம் தமிழக அரசு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்து உள்ளனர். 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மொத்தமாக ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பிற்கு முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். ஜனவரி 2024-இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த மாநாடும், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணமும் வெற்றிகரமாக அமைந்தது. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் Umagine TN 2025 வர்த்தக மாநாடு நடக்க உள்ளது. கடந்த வருட வர்த்தக மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடந்த நிலையல் மீண்டும் Umagine TN 2025 வர்த்தக மாநாடு இன்றும் நாளையும் நடக்க உள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் Umagine TN 2025 வர்த்தக மாநாடு நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக பிரம்மாண்ட திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 50,000 சதுர அடியில் அங்கே பெரிய அரங்குஅமைக்கப்பட்டு உள்ளது. இங்கே விருந்தினர்களுக்கான மேடை தாண்டி, வர்த்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. Sponsors & exhibitors are cornerstones of support & strength to #UmagineTN2025 and their vision will play a pivotal role in driving innovation, shaping successful collaboration and creating opportunities. Welcome to @umaginechennai, Jan 9 & 10, Chennai Trade Centre, Nandambakkam pic.twitter.com/IVFlP7UdkB இந்த நிகழ்ச்சிக்கான பதிவு தொடங்கி உள்ளது. இரண்டு நாள் நாடாகும் நிகழ்வில் 20 மணி நேர்மை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 120க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் பங்கேற்கின்றனர். மொத்தமாக 20+ அமர்வுகளில் பல பொருளாதார அறிஞர்கள், முதலீட்டு வர்த்தக வல்லுனர்கள், பிரபலங்கள் பேச உள்ளனர். டெய்லி ஹண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநரும், ஒன்இந்தியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான, திரு.ராவணன் இந்த நிகழ்வில் பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 10 ஆயிரம் பார்வையாளர்கள், 4000 விருந்தினர்கள், பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார வளர்ச்சி, முதலீடு , வேலைவாய்ப்பு, பணியாளர் கொள்கை, AI தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், நிர்வாகம் என்று பல பிரிவுகளில் இதில் உரையாடல்கள் நடத்தப்பட உள்ளன. பல சிறப்பு வல்லுனர்கள் பேச உள்ள இந்த நிகழ்வை நேரில் காண முடியாதவர்கள்.. டெய்லி ஹண்ட் பக்கத்தில் இது தொடர்பாக செய்திகளை, நிரல்களை கண்டுகளிக்க முடியும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post