லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?

post-img
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன் மற்றும் ஹர்ஸ்டினின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் தீயின் பிடியில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை கென்னத் காட்டுத்தீ 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஈட்டனில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதுவரை கிடைத்த தகவலின்படி 13 பேர் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதால், லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளும், லட்சக்கணக்கான வாகனங்களும் எரிந்து போயின. இந்த தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், பொதுமக்கள் என பலரும் அடங்குவர். பாலிசேட்ஸ் பகுதியில் தீ பரவியதால், அருகிலுள்ள ஆடம்பரமான பிரண்ட்வுட் பகுதியும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சில இடங்களை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பசடேனா உள்ளூர் தீயணைப்புத் துறைத் தலைவர் சாட் அகஸ்டின், மக்கள் வெளியேறுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், கூடைப்பந்து நட்சத்திரம் லெப்ரான் ஜேம்ஸ், நடிகரும் முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், டிஸ்னியின் சிஇஓ பாப் இகர் மற்றும் ராப் பாடகரும் தயாரிப்பாளருமான டாக்டர். டிரே உள்ளிட்ட பிரபலங்களுக்கு இங்கு வீடுகள் உள்ளன. கெட்டி சென்டர் கலை அருங்காட்சியகமும் இந்த பகுதியில் உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post