போர் நடக்கும் நாடு போல.. தரைமட்டமாக மாறிய கலிபோர்னியா.. ஆனா.. இந்த ஒரு விஷயம்தான் இடிக்குது!

post-img
கலிபோர்னியா: தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ.. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போர் நடக்கும் நாடுகளில் எப்படி எல்லாம் தரைமட்டமாக காட்சி அளிக்குமோ அப்படிதான் கலிபோர்னியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகள்.. முக்கியமாக டவுண்டவுன் பகுதிகள் காட்சி அளிக்கின்றன. ஜனவரி 7, 2025 முதல் இந்த காட்டுத்தீ நிலவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியையும் சுற்றியுள்ள பகுதிகளையும் தொடர்ந்து காட்டுத்தீ பாதித்து வருகிறது. சில இடங்களில் மணிக்கு 80-100 மைல்கள் (130-160 கிமீ/மணி) வேகத்தில் கூட காட்டுத்தீ வெப்பமான அனல் காற்றை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 180,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 4 நாளாக அங்கே காட்டுத்தீ பரவிக்கொண்டு இருக்கிறது. அங்கே மொத்தமாக 5 விதமாக காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. பாலிசேட்ஸ், ஈடன், ஹர்ஸ்ட், லிடியா மற்றும் சன்செட் ஃபயர்ஸ் ஆகிய காட்டு தீ அங்கே ஏற்பட்டு உள்ளது. இந்த முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ கைப்பற்றிவிட்டது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி உள்ளது. பாரிஸ் ஹில்டன், பில்லி கிரிஸ்டல் மற்றும் அந்தோனி ஹாப்கின்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பலரும் எறிந்த தங்கள் வீடுகளின் காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தீ நாசமாக்கி உள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன. 5 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.. அங்கே பெரும்பலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அங்கே தீ விபத்தை கிளைமில் இருந்து நீக்கி உள்ளன. அதாவது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தீ விபத்திற்கு பணத்தை கிளைம் பண்ண முடியாது என்று அறிவித்துள்ளன. சரியாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் எல்லா நாடுகளும் ஒரே நேரத்தில் இப்படி கிளைம் பண்ண முடியாது என்று அறிவித்து கடுமையான விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் அங்கே வீடுகளை இழந்தவர்கள் இனி அதை கட்டுவது கடினம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post