பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்.. மாளவிகா ஐயர் பதிவை பகிர்ந்து ஸ்டாலின் நெகிழ்ச்சி

post-img
சென்னை: குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த பெண்ணான மாளவிகா ஐயர் தனது எக்ஸ் தளத்தில், "தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை குறிப்பிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, " பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்" எனப்பதிவிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுப்பானையில் பொங்கலிட்டு கரும்புகள் வைத்து மக்கள் கொண்டாடினர். வீட்டில் வாசல்களில் வண்ணம் கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகயை முன்னிட்டு மக்கள் ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று குடும்பத்துடன் சென்று சந்தித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தனது மனைவி கிருத்திகா உதயநிதி, மகன் இன்பநிதி, மகள் தன்மயா ஆகியோருடன் சென்று முதல்வரும் தனது தந்தையுமான ஸ்டாலின், தாய் துர்கா ஆகியோரைச் சந்தித்து தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். திமுக அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்து செய்திகளே நிரம்பி வழிந்தன. இந்த நிலையில்தான், முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்" என பதிவிட்டு இருந்தார். குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த பெண்ணான மாளவிகா ஐயர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை குறிப்பிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார். யார் இந்த மாளவிகா ஐயர்? கும்பகோணத்தை சேர்ந்தவர் மாளவிகா ஐயர். இவரது தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் இன்ஜினியராக இருந்தவர். ராஜாஸ்தானில் உள்ள பீகானிர் நகரில் குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு மாளவிகா ஐயர் தனது 13 வயதில், விளையாடும்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து தனது 2 கைகளையும் இழந்தவர். எனினும், மன உறுதியுடன் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். கடந்த 2020 ஆம் ஆண்டு மகளிர் தினத்தில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு 7 சாதனைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு சாதனைப் பெண்தான் இந்த டாக்டர் மாளவிகா ஐயர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post